http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 9 24.33
கொல்ல வேண்டாம்... இயற்கை பொருட்களை வைத்து ஓட... ஓட... விரட்டலாமே..!! எலி, பல்லி, ஈ, கொசு, கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி் போன்றவைகள் வராமல் தடுக்க சில எளிய வழிமுறைகள்... கண்டிப்பாக ஒவ்வொருவரும் இது போன்ற தொல்லைகள், இன்னல்கள், துன்பங்கள் தருகின்ற பூச்சிகள் மற்றும் இதர வகைகளால்... அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.. கடைகளில் விற்கும் விலை உயர்ந்த நச்சுப்பொருட்களைப் பயன்படுத்தி அவைகளைக் கொல்ல முயல்வதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே மகிழ்ச்சியுடன் அவற்றை எளிதில் விரட்டலாம். எலிகளுக்கு... எலிகளுக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே, புதினாவை அவைகள் வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ... அல்லது புதினா எண்ணெய்யை பஞ்சில் நனைத்து எலிகள் வரும் இடங்களில் வைத்தாலோ... அவைகள் வருவதைத் தடுக்கலாம்.. பல்லிகளுக்கு... உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில், வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓடுகளை வையுங்கள். அதன் நாற்றத்தினால், பல்லிகள் ஓடிவிடும். ஈக்களுக்கு... சில வீடுகளில் "ஈக்கள்" அதிகம் மொய்க்கும்.. அப்படி உங்கள் வீட்டில் "ஈக்கள்" அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.. இல்லாவிட்டால்... லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். கொசுக்களுக்கு... கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலைகள், நொச்சி இலைகளை பயன்படுத்தலாம்.. கொசு விரட்டிகள், கொசுக்களை விரட்டுவதை விட்டுவிட்டு... நம்மையெல்லாம் வியாதிகளைக்கொண்டு மிரட்டுகின்றன. எனவே அவற்றையெல்லாம் தவிர்த்து கொசுக்களை விரட்ட காய்ந்த வேப்பிலை, நொச்சிஇலை கலவை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால்... காய்ந்த வேப்பிலைகள் மற்றும் நொச்சி இலைகளைக்கொண்டு அனல் அளவிற்கு மட்டுமே தீ மூட்டுங்கள்... அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும் இல்லை...இல்லை... உங்களைக்கண்டு பயந்து ஓடி ஒளிந்துவிடும்...🧐😄🙃 கொசுக்களை விரட்ட வீட்டில் பஞ்சதீபம் ஏற்றுவது இன்னொரு முறை. நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், நெய் இவற்றையெல்லாம் சம அளவில் கலந்து காலை மாலை ஒரு மணிநேரம் விளக்கேற்றிய பிறகு... கொசுவிற்கும் நமது வீட்டிற்கும் ஜென்ம பகையாகிப் போகும். நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளில் இதுவும் ஒன்று. மின் விளக்குகளால் வெளிச்சம் தரமுடிந்ததே தவிர வேறு பயன்கள் இல்லை. ஆனால், இன்று நம் வீட்டு பெண்களுக்கு விளக்கேற்றுவதற்கு இணக்கம் இல்லை...🤨😌😉 கரப்பான்பூச்சிகளுக்கு... கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்... அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் அசல் மிளகுத் தூள், சின்ன வெங்காய கெட்டிச்சாறு மற்றும் பூண்டு கெட்டிச்சாறு ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.. மூட்டைப்பூச்சிகளுக்கு... மூட்டைப்பூச்சிகள் உங்கள் வீட்டின் படுக்கைகளில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் அழிந்து விடும். இயற்கை பூச்சி விரட்டி விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்... வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், நொச்சி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும். இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம். இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருட்கள் (மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் செய்யாதது) மூலம் இப்படிப்பட்ட பூச்சிகள் எளிமையான முறைகளில் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் தேவையான அளவுகளில் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை. மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இப்படி செய்வதன்மூலம் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டலாம்..!!
Send Enquiry
Read More
வணக்கம் நண்பர்களே
வணக்கம் நண்பர்களே கோடை வெயில் கொழுத்துகிறது குளு..குளு... னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும்... ஆனால் இன்று கிடைக்கும் குளிர் பானங்கள் யாவும் கடுமையான தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனம் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது... ஆகையால் பழைய சோறு கம்மஞ்சோறு ராகிகளி வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் இவை நம் பாரம்பரிய உணவாகும்... உடலுக்கு வலிமையும்... உயிராற்றல் பெருகவும் செய்யும் உணவாகும் ஆகையால் ராகி..கம்பு... போன்ற நல்ல உணவுகளை அன்றாடம் வாழ்வில் எடுத்துக் கொண்டு நலமுடன் வாழ்க நல்லது மட்டும் இயற்கை அங்காடி மற்றும் உணவகம் திண்டுக்கல் 73977 92812
Send Enquiry
Read More
நெல்லிக்காய் மோர்;ந
நெல்லிக்காய் மோர்; நலமான வாழ்க்கைக்கு ரசாயனங்கள் சேர்க்காத ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்; நெல்லிக்காயில் உள்ள மருத்துவ பயன்கள், பெருநெல்லி, இரைப்பையில் உள்ள அமிலங்களின் வீரியத்தை குறைக்கும், முக்குற்றங்களையும் சமன்படுத்தும், இதயநோய் வராமல் தடுக்கும், உயிரணுக்களைப் பாதுகாக்கும் , உடல் சூட்டை சமன்படுத்தும், உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும், பார்வைக் கோளாறுகளைப் போக்கும், நெஞ்சுசளி, சயம், சுவாச, காச நோயாளிகளுக்கு நல்லது, பல், ஈறு, வயிறு, குடல், தோல், இரத்தக்குழாய்களை ஆரோக்கியமாக வைக்கும் கர்பப்பை கோளாறுகளை குணப்படுத்தும் .சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது , சக்கரைநோயால் பார்வை குறைவு ஏற்படுவதை தடுக்கும், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆகியவற்றில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்தும்.
Send Enquiry
Read More
தண்ணீரை, டம்ளரில் நன
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும். அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்  *டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.  ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம். *ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்: *மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது. எப்போது தண்ணீர் குடிக்கலாம்: *தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.  *ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.  *பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.  *கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.  *எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.  *தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை. குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும். *தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க.
Send Enquiry
Read More
Page 9 24.33

Updates