http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 5 24.33
வளமான சத்துக்கள் அடங
வளமான சத்துக்கள் அடங்கிய வரகு அரிசி !! இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும்பாலான சிறுதானியங்களைப் பற்றி தெரிவதில்லை. அப்படி அவர்கள் மறந்த போன தானியங்களுள் வரகும் ஒன்று. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். கோதுமையில் உள்ள நார்ச்சத்தை விட வரகு அரிசியில் அதிகம் உள்ளது. வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
Send Enquiry
Read More
நல்லது மட்டும் இயற்
நல்லது மட்டும் இயற்கை அங்காடி திண்டுக்கல் 7397792811 மூங்கில் அரிசி... இயற்கையின் அற்புதக் கொடை! நெல் போலவே இருக்கும். *பழங்குடி மக்களின் முக்கிய உணவு. *60 வயதான மரத்தில்தான் கிடைக்கும். *உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் https://www.facebook.com/nallathumattum.dgl https://twitter.com/nallathumattum https://www.youtube.com/watch?v=4u-arym8h14 வாழையடி வாழையாக வாழ்க... மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க’ என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன. அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்... தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள். 1)உடலில் இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி மூங்கில் அரிசிக்கு உண்டு. 2) மூங்கில் அரிசியை சாப்பிட்டா கழுத்து வலி , இடுப்பு வலி எல்லாம் சரியாகும். 3) மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும் , வீரியத்தையும் கொடுக்கும். 4) மூங்கில் அரிசியில் மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. 5) உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது. 6) பசியைக் குறைக்கும் . ஆற்றலைப் பெருக்கும். 7) உடல் எப்போதும் உரமாகவும் , ஊட்டமாகவும் இருக்க உதவும். 8) மூங்கில் அரிசியை தினையரிசி , சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து சாப்பிடலாம். 9) தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு சுகமளிக்கும்.
Send Enquiry
Read More
Bamboo Rice Moongil
Bamboo Rice Moongil Arisi (மூங்கில் அரிசி) The Traditional bamboo rice is pungent, sweet, strong, and nutritious. It cures kapha, pitta dosha, removes toxic substances from the body and cures the disease in which the vital humors of the body are excreted through urine. Bamboo rice is collected by the tribes residing in the forest from the seeds of flowers, bamboo, is known for its highly nutritive qualities, rich medicinal values. A very good substitutes for the polished white paddy rice. Bamboo rice (Mulayari) has become an important and major source of income for tribals living in the forests. Nature keeps all its treasures hidden deep inside her. From the heart of nature a rare and lesser know seed is being introduced “bamboo rice” these seed are gathered from the jungles of tropical rain forest, bamboos trees which are known to be the tallest of herb grasses which grow in tropical rain forests. Some species of bamboos only bloom with flowers once in 40-60 years and often die after flowering. They compensate this by releasing huge amounts of flowers and seeds, one of many mechanisms that nature employs to ensure the survival of certain species. Bamboo rice is not commonly available due to the reason that it takes many years for an aged plant to flower which is unpredictable as these may vary from few years to 100 years for a bamboo plant to flower. This short-grain rice is infused with bamboo extract, contributing the health benefits of chlorophyll and a rich green colour that’s retained when cooked. The grain is obtained from bamboo tree, which is the tallest herbs in the tropical forests. Some bamboo tree species only flower once in fifty to sixty years and often die after flowering. Bamboo Rice is an all natural, short-grain Asian rice that has been infused with Bamboo juice. This infusion imparts the beautiful jade green colour and a slight jasmine green tea flavour. The name bamboo rice is also given to a short-grain rice that is infused with bamboo juice. This practice is prevalent more in the West. This imparts a green colour and that is very different. The bamboo rice goes very well with our South Indian curries, rasams and even curd. It is available in Tamil Nadu where it is called ‘moongil arisi’. It is cooked in the same manner as regular rice is cooked The bamboo rice is sweet, pungent, nutritious and strong . It cures kapha, pitta dosha, removes toxic substances from the body and cures the disease in which the vital humors of the body are excreted through urine. The nutritious and health value of bamboo rice is very remarkable. It is more healthy to have bamboo rice than the rice from paddy .Seeds used to treat menstrual disorders, respiratory diseases and infections. Its rich content of proteins controls back pain, joints pain and rheumatic pain.The other medicinal and health benefits are Controls sugar, cholesterol and Blood pressure.Good for Pregnant women to overcome vitamin deficiency
Send Enquiry
Read More
நல்லது மட்டும் இயற்க
நல்லது மட்டும் இயற்கை அங்காடிதிண்டுக்கல் 7397792811 கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!! எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் https://www.facebook.com/nallathumattum.dgl https://twitter.com/nallathumattum https://www.youtube.com/watch?v=4u-arym8h14 பெருங்குடல் புற்றுநோய் கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மார்பக புற்றுநோய் கைக்குத்தல் அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது. கொழுப்பை குறைக்கிறது கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது. இதய நோய் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் எடையை பராமரிக்க கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கலை தடுக்க இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம். நீரிழிவை கட்டுப்படுத்த கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான எலும்புகள் கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது. ஆஸ்துமா மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமாவைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும். பித்தக்கற்கள் கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலை குறைக்க உதவுகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது, ஆரோக்கியமான நரம்பு மண்டலம் கைக்குத்தல் அரிசி, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. உணவு முறை தேவைகள் உணவு முறை வழிகாட்டி நாளொன்றுக்கு முழு தானியங்கள் 3 சேவைகள் உட்கொள்ள பரிந்துரைக்கிறது. ஒரு 1/2 கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு, அந்த மூன்று சேவைகளில் ஒன்றிற்கு சமம். அதனால் தினசரி உணவின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கைக்குத்தல் அரிசிச்சோறு ஒரு நல்ல உணவு.
Send Enquiry
Read More
மூங்கிலரிசி பஞ்சமுட்
மூங்கிலரிசி பஞ்சமுட்டி கஞ்சி மிக்ஸ் BAMBOO RICE KANJI MIX மருத்துவ பயன்கள்: 1.புரதச்சத்து நிறைந்தது, 2.எளிதில் ஜீரணமாக் கூடியது. 3.வைட்டமின், கனிமச்சத்து நிறைந்தது. 4.உடலுக்கு வலுவூட்டும். உட்பொருள்கள்: சோம்பு, சீரகம், கருப்பு கடலை, மூங்கிலரிசி, முழு துவரை, கருப்பு உளுந்து, பாசிப்பயிறு. பார்லி கஞ்சி மிக்ஸ் BARLY KANJI MIX மருத்துவ பயன்கள்; 1.உடல் சூடு தணிக்கும், 2.சிறுநீர் பெருக்கும், 3.எளிதில் செரிமானம் ஆகும். உட்பொருட்கள்; மிளகு, வரகு, சோம்பு, சீரகம், பார்லி, சாமை, குதிரைவாலி செய்முறை; ஒரு ஸ்பூன் பொடி. 200ml தண்ணீரில் நன்றாக கலந்து கொதிக்க வைத்து, சுவைக்கேற்ப சர்க்கரை/உப்பு சேர்த்து அருந்தவும்.
Send Enquiry
Read More
Page 5 24.33

Updates