http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 3 24.33
வளமான சத்துக்கள் அடங
வளமான சத்துக்கள் அடங்கிய வரகு அரிசி !! இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும்பாலான சிறுதானியங்களைப் பற்றி தெரிவதில்லை. அப்படி அவர்கள் மறந்த போன தானியங்களுள் வரகும் ஒன்று. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். கோதுமையில் உள்ள நார்ச்சத்தை விட வரகு அரிசியில் அதிகம் உள்ளது. வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
Send Enquiry
Read More
1) கறந்த பசும்பாலை அருந்துங்கள் பாக்கெட் பால் ஒழியும்.( நோயுடன்) 2) உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 3) நம் நாட்டில் தயாராகும் தரமான பொருட்களை ஊக்கப்படுத்துங்கள். அந்நிய நாட்டு கொள்ளையர்கள் காணாமல் போவார்கள். 4) நம் வீட்டு, ஏரி , குளம், பம்ப்... தண்ணீரை எடுத்து பயன்படுத்துங்கள். இளநீர், மோர், நன்னாரி, கூழ்...... குடியுங்கள் காணாது போகும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்....நோய்களுடன் 5) ஞாயிற்றுக்கிழமை என்றால் புலால் என்பதை விடுத்து முன்னோர்களை போல விசேசங்களுக்கு மட்டும் சாப்பிடுங்கள் பிராய்லர் காணாது போகும் முடிந்தவரை இடம் உள்ளவர்கள் நாட்டு கோழி வளருங்கள். 6) கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும். 7)ஒரு சீமை கருவேலத்தை வேரொடு சாயுங்கள் வறட்சி குறையும். 8)நீர் நிலைகளில் குப்பைகளையும் வீட்டு கழிவுகளையும் கலக்காதீர்கள். நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கும். 9) இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். வளரும் தலைமுறைகளேனும் நோயின்றி வாழட்டும். 10) போதைப் பொருட்கள், மது...... பயன்படுத்துவதை தவிருங்கள். உடல் வலிமையும், மன உறுதியும் உண்டாகும். 11) அன்னிய நாகரீகம் வேண்டாம். நமது பண்பாடே உயர்வானது. முயன்றால் முடியாதது ஏதுமில்லை...👍👍 இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812
Send Enquiry
Read More
Page 3 24.33

Updates