http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 2 24.33
ஒரு வாரம் கோதுமைப்பு
ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்… சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியர்களின் பட்டியல் தான் முன்னணியில் இருக்கிறது. இது நமக்குப் பெருமை தரக்கூடிய வியமெல்லாம் ஒன்றும் கிடையாது. இது நம்மை அச்சுறுத்துகின்ற ஒரு செய்தி. இதில் நாம் சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தியும் இருக்கிறது. வெளிநாடுகளில் உணவுக் கட்டுப்பாடும் மருத்துவ முறைகளும் மிகக் கராராகப் பின்பற்றப்படுகின்றன. நம்முடைய முன்னோர்கள் சில உணவுகளின் வழியாகவே சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். நாமோ நாகரீகம் என்ற பெயரில் அதைத் தவறவிட்டு விட்டோம். அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த கோதுமைப்புல். கோதுமைப்புல்; சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சரி, சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்று பயப்படுகிறவர்களுக்கும் மிக அற்புதமான மருந்தாக, இந்த கோதுமைப்புல். அறுகம்புல் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் எல்லோருக்குமே தெரியுமம். அதேபோன்று தான் கோதுமைப்புல்லிலும் எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டும் பார்ப்பதற்கு ஓரளவுக்கு ஒன்று போலவே இருக்கும். எங்கு கிடைக்கும்? இப்போதெல்லாம் ஜூஸ் கடைகளில் வீட் கிராஸ் ஜூஸ் என்று கிடைக்கிறது. ஃபிரஷ்ஷாக நமக்குப் போட்டுத் தருகிறார்கள். வெறுமனு இதை குடிக்கப் பிடிக்காதவர்கள் வேறு சில பழச்சாறுகளுடன் சேர்த்து இந்த கோதுமைப்புல் ஜூஸை குடிக்கிறார்கள். அதைவிடவும் இந்த கோதுமைப்புல்லை நம்முடைய வீட்டில் வளர்ப்பது மிகமிக எளிது. ஒரு சின்ன தொட்டியில் வசில கோதுமை விதைகளைப் போட்டு, நம்முடைய அடுப்பங்கறையிலேயே வைத்து வளர்க்க முடியும்.மிக எளிதாக ஓரிரு நாட்களில் வளர்ந்துவிடும். நான்கு இன்ச் வரையிலும் வளர்ந்தாலே போதும். அதைப் பறித்துப் பயன்படுத்தலாம் சத்துக்கள்; இந்த கோதுமைப் புல் செடியில் வேர் முதல் முழுமையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கோதுமைப் புல்லில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, பி1, 2, 3, 4, 5, 6, 8, 12 சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நன்மைகள் ஹீமோகுளோபின்; உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்கின்ற தன்மை கொண்டது. இதன்மூலம் உடலின் ரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கும். அதாவது ஹீமோகுளுாபினை கூட்டும் தன்மை கொண்டது இந்த கோதுமைப்புல். நச்சுக்கள்; நீண்ட காலமாக ஏதாவது பிரச்சினைக்காக தொடர்நு்து மருந்து சாப்பிடுகின்றவர்களுக்கு கல்லீரல் மற்றும் ரத்தத்தில் சில நச்சுத் தன்மைகள் இருக்கும். அத்தகைய நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் ஆற்றல் இந்த கோதுமைப் புல் சாறுக்கு உண்டு. மலச்சிக்கல்; பெருங்குடலைச் சுத்தம் செய்யும். இதனால் ஜீரண சக்தி துரிதப்படுத்தப்பட்டு, மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. ரத்த அழுத்தம்; கோதுமைப் புல் சாறு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும். இதை உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் தொடர்ந்து தினமும் கோதுமைப்புல் சாறு ஒரு டம்ளர் அளவுக்குக் குடித்து வரலாம். முகப்பருக்கள்; சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் அதிக ஆற்றல் கொண்டது இந்த கோதுமைப்புல். முகப்பரு மற்றும் உடலில் இருக்கின்ற கரும்புள்ளிகள் மற்றும் வடுக்கள் மறைவதற்குப் பெரிதும் உதவுகிறது. இது உடலுக்குள் இருக்கும் ஆக்சிஸனின் அளவைச் சமன்படுத்தும். ரத்த சர்க்கரை; நம்முடைய உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகின்ற உடல் சோர்வினால் ஏற்படும் பாதிப்புகள், பாதத்தில் உண்டாகின்ற எரிச்சல், உடல் சதைகளுக்குள் உண்டாகும் குத்தல் ஆகியவற்றைச் சரிசெய்யும். இளமை; இந்த கோதுமைப்புல் சாறினை தினமும் குடித்து வந்தால் ஐம்பது ஆண்டுகள் வரையிலும் நரைமுடி என்பதே உங்களை எட்டிப் பார்க்காது. என்றுமே இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் கோதுமைப்புல் சாறு அல்லது கோதுமைப் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு; உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுக்கும். உங்களுடைய உடல் செரிமாணத்தைத் துரிதப்படுத்தும். உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கும். சிறுநீரகக் கோளாறுகள்; சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். சிறுநீரகப் பாதையில் உண்டாகின்ற அனைத்துவிதமான தொற்றுக்கள், விரை வீக்கங்கள், சிறுநீரகக் கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பல பிரச்சினைகளை இந்த கோதுமைப்புல் சாறு தீர்க்கும் ஆற்றல் கொண்டது. நுரையீரல்; நுரையீரல் சம்பந்தப்பட்ட தொற்றுக்கள், சுவாச மண்டலங்களைத் தீர்க்கும் ஆறு்றல் கொண்டது. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கள், சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய்; சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளிகள் சில சமயங்களில் புற்றுநோய் உண்டாகக் காரணமாக நாம் அறிந்திருப்போம். வெண்புள்ளி, தேமல், சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமடையும். இந்த பொடியை தினமும் குடித்து வந்தால், அது கேன்சர் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
Send Enquiry
Read More
திப்பிலி பற்றி தெரிய
திப்பிலி பற்றி தெரியுமா? எந்தெந்த நோய்க்கெல்லாம் தி்ப்பிலியை சாப்பிடலாம்? சளி, இருமல் ஆகியவை வாழ்நாள் முழுக்க நம்மைத் தொடர்ந்து வருகின்ற ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆகும். இவற்றைச் சரி செய்வதற்கு நாமும் ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டு அதை அப்படியே அடக்கி வைத்து விடுகிறோம். நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_ நல்லது மட்டும்-ன் குழுவில் இணைய இதை சொடுக்கவும்.. (கிளிக் செய்யவும்..) 👇 https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t அது உள்ளேயே தேங்கித் தேங்கி நெஞ்சு சளியாகவும் ஆஸ்துமாகவும் மாறிவிடும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். சளித்தொல்லை; சளி என்பது நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற அசுத்தங்களையும் சேர்த்தே வெளியேற்றும். அதனால் சளி பிடித்தால் அதை முழுமையாக வெளியேற்ற வழி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு நாமோ அதை அடக்குவதற்கான மாத்திரை போட்டு உள்ளே தள்ளிவிடுகிறோம். அது அப்படியே நம்முடைய உடலுக்குள் தேங்க ஆரம்பித்துவிடும். திப்பிலியின் அற்புதங்கள்; சளி, இருமல் மற்றும் இளைப்பு ஆகிய முக்கிய நோய்களுக்கு ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் இயற்கையாகக் கிடைக்கின்ற மூலிகைகள் தான் மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கும். சில முக்கிய மூலிகைகளின் வழியாக நாம் மிக எளிதாக நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திப்பிலி. இந்த திப்பிலி மிகவும் கொடிய நீண்ட நாள் சளியைக் கூட வெளியேற்றி விடும். எங்கு கிடைக்கும்? திரிகடுகம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகள் சேர்ந்தது. அந்த மூன்றில மிக முக்கியமானதும் வீரியம் மிக்கதும் தான் இந்த திப்பிலி. இந்த திப்பில் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் மிக எளிதாகவே கிடைக்கும். முழு மூலிகையாகவும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். திப்பிலிக்குள் எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெயைக் கொண்டுள்ளது. இது பல நோய்களைக் குணப்படுத்துகின்ற அரிய மருந்தாக இருக்கிறது. நோய்கள்; திப்பிலி எனும் அற்புத மூலிகையானது மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், பித்த நீர்ப்பையில் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றை திப்பிலி குணப்படுத்தும். தாது இழப்பு; கொஞ்சம் திப்பிலியை எடுத்து வறுத்துப் பொடி செய்து, அதனுடன் கொஞ்சம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், இருமல், தொண்டைக் கமறல், உடல் வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும். வயிற்றுப் பொருமல்; சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சரியான அளவில் கொஞ்சம் திப்பிலியை எடுத்து, அதை வறுத்துப் பொடியாக்கி, சிறிது தேனுடன் கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வர, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இளைப்பு நோய்; திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, அதே சம அளவுக்கு கடுக்காய் பொடியையும் சம அளவும் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு தேன் விட்டுப் பிசைந்து, இலந்தை பழத்தின் அளவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் இருந்து வந்த இளைப்பு நோய் கூட தீரும். சுவையின்மை; திப்பிலி் பொடியை எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை அளவுக்கு சாப்பிட்டு வந்தால், சிலருக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரையிலும் தொண்டை கட்டிக் கொண்டு இருத்தல், கோழைப்படுதல், குரலில் கம்மல் கொள்ளுதல், உணவில் சுவையில்லாமல் இருத்தல் ஆகியவை ஏற்படும். குடல் புழுக்கள்; திப்பிலி பொடியை எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அது குழந்தைகளின் குடலில் உள்ள புழுக்களை அகற்ற சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள்; புதிதாகக் குழந்தை பெற்றுக் கொண்ட, பாலூட்டும் தாய்மார்கள் வெதுவெதுப்பான நீருக்குள் திப்பிலி பொடியினைக் கலந்து கொடுத்தால் அவர்களுக்கு உண்டாகும் ரத்தப் போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை சரியாகும். பசியின்மை; மிளகுடன் சம அளவுக்கு திப்பிலி பொடியும் கலந்து சாப்பிட்டு வந்தால், மயக்கம் மற்றும் உணர்ச்சி இல்லாமல் இருக்கும்போது, உணர்வைத் தூண்டிவிடும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாசக் கோளாறுகள்; தொடர்ந்து சளித் தொல்லையினால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நாளடைவில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அப்படி சுவாசப் பிரச்சினைகள் இருக்கின்ற பொழுது, திப்பிலிப் பொடியை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வர, சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும். இது எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் திப்பிலிபொடி கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
தலைமுடி பிரச்சனை முத
தலைமுடி பிரச்சனை முதல் புற்றுநோய் வரை அத்தனைக்கும் வரப்பிரசாதம் இந்த விதைதான்.. மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் எல்லோரையும் அச்சுறுத்துகின்ற ஒரு வியாதியாக இருப்பது புற்றுநோய் தான். அதிலும் குறிப்பாக, உடலின் உள்ளுறுப்புக்களில் வருகின்ற புற்றுநோய் நமக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் எந்தவித அறிகுறியையும் வெளிக்காட்டாமல் ரகசியமாக வளர்ந்து மற்ற உறுப்பகளையும் சிதைக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்போது நம்மால் என்ன செய்ய முடியும். அதில் மிக முக்கியமான ஒன்று கணைய புற்றுநோய். கணைய புற்றுநோய்; கணைய புற்றுநோயானது அவ்வளவு எளிதாக எந்தவித அறிகுறியையும் நமக்கு வெளியில் காட்டுவதே இல்லை. வந்தபின்பும் மற்ற உறுப்புகளை விட, இந்த கணைய புற்றுநோயில் இருந்து காப்பாற்றுவது மிகமிக அரிதான விஷயம். கர்ப்ப காலத்தின் போது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் பிற்காலத்தில்இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். இத்தகைய புற்றுநோயை அடியோடு குணப்படுத்தும் ஒரு இயற்கை வரப்பிரசாதம் தான் கருஞ்சீரகம். நன்மைகள்; நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற பிராண சக்தி குறைகின்ற பொழுது, நம் ரத்தம், கணையம், குடல் என நம்முடைய உடலுக்குள் உறைந்திருக்கின்ற புற்றுநோய் செல்கள் பல மடங்கு பெருக ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த கருஞ்சீரகமோ நம்முடைய உடலுக்குத் தேவையான பிராண சக்தியை நமக்கு வழங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. இயற்கையாகவே நம்முடைய உடலுக்குள் நச்சுப்பொருள்கள் எதுவும் சென்று சேராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கருஞ்சீரகத்துக்கு உண்டு. நம்முடைய எலும்பு மஜ்ஜைகள் சீராக உற்பத்தியாகவும் இயங்கவும் கூட இந்த கருஞ்சீரகம் பெரும் துணை புரிகிறது. மேலும் உடலின் கொலஸ்ட்ராலின் அளவினை சமன் செய்வதற்கான உதவியையும் செய்கிறது. ஊட்டச்சத்துக்கள்; உடலுக்குத் தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிட்ரிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ணுயிலிக் அமிலம், லினோயின் அமிலம், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், ஃபோலிக் அமிலம் போன்றவை கருஞ்சீரகத்துக்குள் இருந்திருக்கிறது. அதோடு புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, பி2, பி3 போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய அற்புத மருத்துவம் தான் இந்த கருஞ்சீரகம். மருத்துவ குணங்கள்; கருஞ்சீரகம் நம்முடைய பசியை சரியான இடைவெளியில் தூண்டிவிடும். அதோடு மட்டுமல்லாமல் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. வாந்தி மயக்கம் ஆகியவற்றைத் தீர்க்கும். இதயப் பிரச்னைகள் தீரும். சிறிதளவு கருஞ்சீரகத்தை எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும். இன்னும் ஏராளமான பலன்களை கருஞ்சீரகம் நமக்குக் கொடுக்கிறது. தோல் வியாதிகள்; கருஞ்சீரகத்தைத் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த பேஸ்ட்டை நல்லெண்ணெயில் குழைத்து கரப்பான், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் தடவி வர தோல் சம்பந்தப்பட்ட தீராத நோயும் தீரும். தேமல் மேல் தடவ, தேமலும் மறையும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குறைப்பதில் மிகத் தீவிரமாக குணப்படுத்துவது கருஞ்சீரகம். வயிற்றுப் பிரச்னை; கருஞ்சீரகத்தைத் சில துளிகள் தேன்விட்டு அரைத்து, பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு வயிற்றில் தடவி வர, தீராத வலியும் தீரும். அதேபோல கருஞ்சீரகப் பொடியுடன் சிறிது மல்லிப்பொடியும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வர, அஜீரணக்கோளாறுகள் சரியாகும். தயிரில் கலந்தும் சாப்பிடலாம். வாய் பிரச்னைகள்; கருஞ்சீரகத்தை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து வீக்கங்களில் தடவினால் வீக்கம் கரையும். அதேபோல வினிகரில் சிறிது கருஞ்சீரகத்தைப் போட்டு வேகவைத்து வாய் கொப்பளித்து வந்தால் சொத்தைப்பல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கும். ஜலதோஷம்; தலைவலிக்கு கருஞ்சீரகத்தை அரைத்து பற்று போடலாம். இந்த விதைகளைப் பொடி செய்து, நலலெண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் இரண்டு சொட்டுகள் வீதம் விட்டு வந்தால் கடுமையான ஜலதோஷம் தீரும். தலைமுடிக்கு; கருஞ்சீரகம் தலைமுடிக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. கருஞ்சீரகத்தை 4 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, லேசாக வறுக்கவும். கால் லிட்டர் நல்லெண்ணெயை மேிதமான தீயில் வைத்துக் காய்ச்சி அதில் இந்த பொடியைப் போட்டு காய்ச்சுங்கள். எண்ணெய்ப் புகை வரும் அளவுக்குக் காய்ச்சக் கூடாது. பின் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைத்து, தினமும் தலையில் தேய்த்து வாருங்கள். தலைமுடி கருகருவென வளர ஆரம்பிக்கும். இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் கருஞ்சீரகம் கிடைக்கும் 🌱
Send Enquiry
Read More
எடை குறைப்பிலிருந்து
எடை குறைப்பிலிருந்து இதய ஆரோக்கியம் வரை பயன்படும் கறிவேப்பிலை எப்பொழுதுமே சாப்பிட ஆரம்பித்தவுடன் நாம் முதலில் செய்யும் காரியம் உணவில் உள்ள கறிவேப்பிலைகளை எடுத்து ஓரமாக வைப்பதுதான். அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. ஏனெனில் நமக்கு தெரிந்தவரை கறிவேப்பிலை என்பது தாளிக்க பயன்படும் ஒரு பொருள் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் கறிவேப்பிலை ஒரு அற்புத மூலிகையாகும். நாம் ஓரமாக எடுத்து வைக்கத்தான் போகிறோம் என்று தெரிந்தும் ஏன் பழங்காலம் முதலே உணவில் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?. ஏனெனில் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டது. இரத்தசோகை கறிவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலங்கள் அதிகம் உள்ளது. இரத்தசோகை என்பது உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவாக உள்ளதால் மட்டும் ஏற்படுவதில்லை, உங்கள் உடலில் உள்ள இரும்பு சத்துக்கள் சரியாக உபயோகிப்படாத போதும் ஏற்படுகிறது. இங்குதான் போலிக் அமிலங்கள் அவற்றின் வேலையை செய்கிறது. போலிக் அமிலங்களின் வேலையே இரும்பு சத்தை உடலை உறிஞ்ச செய்வதுதான். கறிவேப்பிலையில் இந்த இரண்டுமே உள்ளதால் இது இரத்தசோகையை குறைக்கிறது. உங்களுக்கு இரத்தசோகை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுங்கள். கல்லீரல் பாதுகாப்பு நீங்கள் அதிகம் குடிப்பவராக இருந்தால் நிச்சயம் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள்தான் கறிவேப்பிலையை அதிகம் உண்ணவேண்டும். ஏனெனில் கறிவேப்பிலை தீங்கு விளைவிக்க கூடிய நச்சு பொருள்களில் இருந்து உங்கள் கல்லீரலை பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை மட்டும் பாதுகாக்காமல் மற்ற உடலுறுப்புகளையும் சீராக செய்லபட வைக்கிறது. சர்க்கரை நோய் கறிவேப்பிலை உடலிலுள்ள இன்சுலின் சுரப்பியை சீராக செயல்பட வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எடை அதிகமாக உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்தாகும். இதய நோய் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புளை கறிவேப்பிலை கரைக்க கூடியது என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் இரத்ததில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடியது என்றார் சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. மேலும் இதிலுள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்க கூடியது. செரிமானம் கறிவேப்பிலை இலைகள் இயற்கையாவே உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் உடையவை. அதேநேரம் இவை செரிமானத்தை ஊக்குவிக்க கூடியவை. ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலுக்குள் சென்ற உடனேயே செரிமானத்தை ஊக்குவிக்கும் பணியை தொடங்கிவிடுகிறது. வயிற்றுப்போக்கு இது வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஏனெனில் இதில் உள்ள கார்பசோல் அல்கலாய்டு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு வயிற்று பிரச்சினைகளை குணமாக்க கூடியது. மேலும் இது உடலில் உள்ள பித்தத்தின் அளவை குறைக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மோரில் சில கறிவேப்பிலை இலைகளை அரைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் விரைவில் குணமடையும். கீமோதெரபி இது கறிவேப்பிலையில் உள்ள ஒரு அற்புத சக்தியாகும். ரேடியோதெரபி அல்லது கீமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது நம் உடலில் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். கறிவேப்பிலை இந்த பக்கவிளைவுகளை குறைக்க கூடும். இது நம் குரோமோஸோம்க்களை மட்டும் பாதுக்காமல் எலும்புகளையும் சேர்த்து பாதுகாக்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களை அதன் ஆரம்ப நிலையிலேயே இவை அழிக்கக்கூடியவை. சரும பாதுகாப்பு இது உங்களுக்கு வினோதமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. கறிவேப்பிலையில் வலுவான ஆன்டிஆக்சிடண்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் முகப்பரு, சரும அழற்சி போன்ற பல பிரச்சினைகளுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கிறது. முடி வளர்ச்சி இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். கறிவேப்பிலை முடியின் நிறத்தை பாதுகாப்பதுடன், முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மெல்லிய முடி வேரை வலுவாக்குகிறது, சேதமடைந்த முடிகளை வலுப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது. எனவே இதனை நேரடியாக சாப்பிடுங்கள் அல்லது எண்ணெயில் கலந்து தினமும் தலையில் தடவுங்கள். எடை குறைப்பு எடை குறைப்பில் கறிவேப்பிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கார்பசோல் அல்கலாய்டுகள், குறிப்பாக மஹானைபைன், உடல் எடை அதிகரிப்பிற்கு எதிராக செயல்படுவதோடு உடலில் உள்ள கொழுப்புகளையும் குறைக்கிறது. எனவே நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கறிவேப்பிலை இருக்கும்படி பார்த்துக்கொண்டால் விரைவில் சில கிலோக்கள் உங்கள் உடலில் இருந்து காணாமல் போவதை பார்க்கலாம்.
Send Enquiry
Read More
முகர்ந்தாலே பல நோய்க
முகர்ந்தாலே பல நோய்களை குணப்படுத்தும் திருநீற்றுப் பச்சிலை... உங்க வீட்ல இல்லயா? ரொம்ப நாளா உங்க வீட்ல வெச்சிருக்கிற செடிகள் சரியா வளராம இருக்கா? இல்ல பூச்செடிகள் சரியா பூக்காம இருக்கா? அப்படி இருந்தா இந்த திருநீற்றுப் பச்சிலை செடியில் இருந்து நான்கே நான்கு இலைகளை மட்டும் பறித்துக் கொண்டு போய், அந்த செடிகளுக்கு அருகில் வைத்தால், அப்புறம் பாருங்கள் செடிகள் எப்படி வளர்கிறது, எப்படி பூக்கிறது என்று.அவ்வளவு அற்புதங்கள் செய்யும் இந்த பச்சிலை பற்றி இன்னும் சில அற்புதங்களைப் பற்றி சொல்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள் நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/ திருநீற்றுப் பச்சிலை: திருநீற்றுப் பச்சிலை மிகவும் வாசனை மிகுந்த தாவரம். இதனுடைய பிறப்பிடமே தெற்கு ஆசியாவிலுள்ள இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தான். இந்த இலையைக் கசக்கி முகர்ந்ர் பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்து. குறிப்பாக, ரத்த வாந்தியைக் கூட கட்டப்படுத்தும். பேன் மற்றும் பொடுகு: தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாறை தனியாகவோ அல்லது எண்ணெயில் கலந்தோ தேய்த்து தலைக்குக் குளித்து வாருங்கள். பேன், பொடுகுத் தொல்லை போயே போயிடும். முகப்பருக்கள்; பரு வயதுடையவர்களுக்கு முக்கிய பிரச்னையே இந்த பருக்கள் தான். குறிப்பாக, பெண்களுக்கு இதனால் உண்டாகும் தொல்லை மிக அதிகம். சிலர் பருவைப் போக்க ஏதாவது கெமிக்கல் நிறைந்த க்ரீம்களைப் போட்டு, முகத்தில் பரு இருந்த இடம் புண்ணாகிவிடுகிறது. கரும்புள்ளிகளும் வந்து விடுகின்றன. அத்தகைய பிரச்சினைகளுக்கு இந்த திருநீற்றுப் பச்சிலை மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த இலையை கைகளால் கசக்கி, அதனுடைய சாறினை முகத்தில் தடவினாலே போதும் பருக்கள் காணாமல் போய்விடும். அதன் தடமும் மறை்நது விடும். கண் பிரச்சினைகள்; சாதாரணப் பருக்கள் மட்டுமின்றி, புரையோடி சீழ்வைத்த பருக்களாக இருந்தால் கூட குணப்படுத்தும். அதோடு மட்டுமல்லாது, கண்கட்டி போன்ற சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதனுடைய சாறு மிகச்சிறந்த தீர்வைத் தரும். வயிற்றுப்பூச்சிகள்; திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான் சியா விதைகள் என்ற பெயரில் விறகப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது சிறுநீர் பெருக்கி; சிறுநீர் பெருக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும். மூலப்பொருள்கள்; திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இதில் மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்டது. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது, சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால், மெத்தில் ஈகிய ஏராளமான மூலப்பொருள்கள் இதற்குள் இருக்கின்றன.
Send Enquiry
Read More
Page 2 24.33

Updates