http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 11 24.33
NALLATHU MATTUM DIND
NALLATHU MATTUM DINDIGUL நவதானியம்: கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். கோதுமை: முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். நெல்: சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, ‘கறுப்புகாவனி‘ அரிசி.இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. துவரை: இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும் உதவும்.துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம். கடலை:நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம்சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அவரை: இது, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படியும் கொழுப்பை கரைத்து விடும். ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பயன் கிடைக்கும். மூட்டு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மூளையை வலுவாக்கி, அறிவுக்கூர்மையை அதிகரிக்கவும் உதவும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், அவரைக்காயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும். எள்:எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறதுஎலும்பு அடர்த்தியை பராமரிக்கிறதுஎலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.கொழுப்பின் அளவை குறைக்கிறது.இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. உளுந்து:இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும். முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது. பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும். கொள்ளு:நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும். பயறு:மனிதனுடைய உணவின் ஒரு முக்கியபாகம் வகிப்பது பயறுவகைப் பயறுகளே ஆகும். "சூப்பர் உணவு" என்று ஐக்கிய நாடுகள் சபை பயறுவகைப் பயறுகளை வர்ணித்துள்ளது. "ஏழைகளின் இறைச்சி" என்று வர்ணிக்கப்படும் பயறுகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரதத்ைத அதிகளவில் தருகிறது.வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்சத்துக்ள், நுண்ணுாட்டச் சத்துக்கள், ெமக்னீசியம் , ெசலீனியம் ேபான்ற தாதுக்கள் நிறைந்த அளவில் பயறுகளில் உள்ளன. சத்துக்கள் நிறைந்த இவைகளை உற்பத்தி ெசய்வதில் மிகக்குறைவான தண்ணீேர ேபாதுமானதாக உள்ளது.பயிறுகளில் ெகாழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாக அறியப்படுகிறது.
Send Enquiry
Read More
தாமிர பாத்திரத்தில்
தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! 1)தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். 2)இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். 3)அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் 4)பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும். 5)தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும். 6)கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. 7)புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும். 8)மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும். 9)செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம். 10)இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும். 11)கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் … தாமிர பாத்திரங்கள் கிடைக்கும் இடம்- நல்லது மட்டும், திண்டுக்கல் கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், வழிகாட்டி விநாயகர் கோவில் அருகில், போன்:7397792811 மின்னஞ்சல்:nallathumattumdgl@gmail.com
Send Enquiry
Read More
Page 11 24.33

Updates