http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 10 24.33
துத்தி இலைப் பொடி;ம
துத்தி இலைப் பொடி; மூல நோய், வயிற்று போக்கு., பல்வலி , காசம், இரத்த வாந்தி , வெண்மேகம், உள்சூடு, மேக அணல் நீக்கி காமம் மற்றும் உடல் பெறுக்கியாகவும் செயல்படும். சிறுநெருஞ்சில் பொடி; சிறுநீரகத்தில் கல் அடைப்பு , எரிச்சல் போக்கியாகவும், சிறுநீர், தாதுபலம் மற்றும் காமம் பெறுக்கியாகவும் செயல்படுகிறது. திரிகடுகு சூரணம்; அஜீரணம் , வயிற்று வலி.சளி, இருமல், பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் நீங்கும். திரி பலா அமுதம்; மலச்சிக்கல் சீராகும், இருமல், வாய்ப்புண் குணமடையும். பேதி நீக்கி உடலைக் கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது. கண் நோய் தீரும். நிலவேம்பு பொடி; ஜுரகாய்ச்சல் , குளிர்சுரம் குறைய பசியைத் தூண்ட, குடல் பூச்சி நீங்க, உடல் வலுப்பெற, பித்த அதிகரிப்பை குறைக்க, தலைவலி நீங்க, குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
Send Enquiry
Read More
மருதோன்றி பொடி;கைகள
மருதோன்றி பொடி; கைகளுக்கு பற்று இட உடல் சூடு குறையும், தேங்காய் எண்ணையில் காய்ச்சி வடிகட்டித் தலைக்கு தேய்த்து வர முடி செழித்து வளரும். ஆரஞ்சு தோல் பொடி; முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி முகம் பொலிவுடனும் , இளமையுடனும் தோன்றும், தேக ஆரோக்கியம் கிட்டும். திப்பிலிப் பொடி; வர இருமல், பசியின்மை, தாது இழப்பு, வயிற்றுப் பொருமல் , நீர்க்கோழை, தொண்டைக் கம்மல் குணமாகும், வெந்தயப் பொடி; காய்ச்சல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படுதல்.உடல் எரிச்சல் இளைப்பு நோய், ஆகியவற்றை குணமாக்கும், மலமிளக்கும், மேலும் கல்லீரல் நோய்கள், வயிற்று உப்புசம், மந்தம், குடல்வாயு போன்றவற்றையும் குணமாக்கும்.ஆண்மையும் பெருக்கும். வேப்பம்பூ பொடி; பித்தம், மலக்கிருமிகள், உடல்வலிகள் நீங்கி நல்ல சுகம் தரும்.
Send Enquiry
Read More
பனங்கற்கண்டு;வாத பி
பனங்கற்கண்டு; வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
Send Enquiry
Read More
Health benefits of J
Health benefits of Jaggery - கருப்பட்டியின் பயன்கள்... பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். • குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
Send Enquiry
Read More
Page 10 24.33

Updates