http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 1 24.33
நல்லது மட்டும் இயற்க
நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t 👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி! 👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி! 👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி! 👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி! 👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி! 👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி! 👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி! 👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி! 👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி! 👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி! 👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி! 👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி! 👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி! 👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி! 👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி! 👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி. 👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி. 👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி. 👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி. 👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி. 👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி. 👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி! 👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி! 👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி ! 👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி!
Send Enquiry
Read More
உடல் பருமன் முதல் நீ
உடல் பருமன் முதல் நீண்ட இளமை வரை பலவகையில் உதவும் பிரவுன் சுகர்..! நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_ நல்லது மட்டும்-ன் குழுவில் இணைய இதை சொடுக்கவும்.. (கிளிக் செய்யவும்..) 👇 https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவு பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் மாற்று இங்கு உள்ளது. உணவின் தரத்தை வைத்தே நாம் அவற்றை சாப்பிட வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை தீர்மானிக்க்க வேண்டும். நம் உடலுக்கு எல்லா வித ஆற்றலையும் தர கூடிய உணவு வகைகளை நாம் தவிர்த்து வந்தால், பல்வேறு விளைவுகள் வரும். அந்த வகையில் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இந்த நாட்டு சர்க்கரை உள்ளது. இதில் உள்ள நன்மைகள் ஏராளம். வெள்ளை சர்க்கரைக்கு பதில் இனி நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி வந்தால் உடல் பருமன் முதல் மாதவிடாய் வலி வரை அனைத்திற்கும் இது நன்மை தருமாம். இவற்றின் முழு பயன்பாட்டை பற்றி இனி அறிந்து கொள்வோம். நலம் தரும் நாட்டு சர்க்கரை...; நாட்டு சர்க்கரையில் பல வித நலன்கள் இருக்கிறது. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இது உடல் வலிமைக்கு மிகவும் உதவும். நாட்டு சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம், இரும்புசத்து போன்றவை நிறைந்துள்ளதாம். வேதி பொருட்கள் அற்ற சர்க்கரை...! வெள்ளை சர்க்கரையை போன்று இதில் எந்த வித வேதி பொருட்களும் கலப்பதில்லை. முற்றிலுமாக இயற்கை ரீதியாகவே இதனை தயார் செய்கின்றனர். ஆதலால், இயற்கையாகவே இதில் எண்ணற்ற தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கும். அத்துடன், எந்த வித பாதிப்பையும் இது உடலுக்கு தராது. மாதவிடாய் வலிகளுக்கு; பெண்களின் மிக கொடுமையான நாட்களாக கருதப்படும் இந்த மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி உண்மையில் மோசமானதுதான். இந்த வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படும். மேலும், கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடும். உடல் எடை குறைக்க...; தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடிவிட்டதே என வருத்தப்படுபவரா நீங்கள்..? இனி இந்த கவலைக்கு தீர்வை தருகிறது நாட்டு சர்க்கரை. இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறதாம். எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் உடல் எடை குறைய அதிகம் உதவும். கர்ப்பிணிகளின் நலன் காக்க...; குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பிணிகள் உடல் அளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இதனை அவர்கள் சரி செய்ய பல வித வழிகளை கையாண்டும் பல பெற்றிருக்க மாட்டார்கள். உடனடியாக பழைய நிலைக்கே திரும்ப நாட்டு சர்க்கரை பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா பிரச்சினைக்கு; இன்று பலரும் மூச்சு திணறல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு ஒரு அருமையான தீர்வாக இந்த நாட்டு சர்க்கரை இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சினை குணமடையும். மேலும், உடலுக்கு அதிக வலிமையையும் கிடைக்கும். அஜீரண கோளாறுகளுக்கு..; செரிமான பிரச்சினையால் இன்று பலர் கஷ்டப்படுகின்றனர். இனி நாட்டு சர்க்கரையை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரண கோளாறுகள் விரைவிலே குணமாகும். அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடியுங்கள். புத்துணர்வூட்டி...; தினமும் சோர்வாக உணர்கிறீர்களா..? இனி இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு சர்க்கரை பயன்படும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் பலவித நன்மைகள் கிடைக்கும். இவை சோர்வாக உள்ள உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். சளி தொல்லைக்கு; பருவ காலங்களில் சளி தொல்லையால் பலர் பாதிக்கப்படுவர். இதனை சரி செய்ய நாட்டு சர்க்கரை உள்ளது. இவை சளி, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை உடனடியாகவே குணமாக்கும். சளிக்கும் சிறிது ஐஜினி மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம். சரும அழகிற்கு; இதில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை முற்றிலுமாக இது போக்கும். மேலும், இளமையான சருமத்தை தந்து செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள். இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் நாட்டு சர்க்கரை கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
இதய கோளாறுகளை தடுக்க
இதய கோளாறுகளை தடுக்கணுமா...? அப்போ தினமும் இந்த நட்ஸ்(பருப்பு)களை சாப்பிட்டு வாருங்கள்... *நல்லது மட்டும் இயற்கை அங்காடி, * கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_ நல்லது மட்டும்-ன் குழுவில் இணைய இதை சொடுக்கவும்.. (கிளிக் செய்யவும்..) 👇 https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t நம் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய நவீன உலகில், உடல் நலத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் நாம் ஒரு இயந்திரம் போல பணத்தை மட்டுமே சம்பாதித்து கொண்டிருக்கின்றோம். இது நிச்சயம் ஆரோக்கியமான சூழலையும், நலமான உடல் அமைப்பையும் தராது. உடல் உறுப்புகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த இதயம் தான். இதன் துடிப்பு நின்று விட்டால் நாம் எல்லோரும் அவ்வளவுதான். இதயத்தை நம்மில் பலர் கண்டுகொள்வதே இல்லை. இது பல்வேறு வகையான பின்விளைவுகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எவ்வாறு நாம் இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த பருப்பு வகைகள் இதயத்தை நலமாக பார்த்து கொள்ளும் என்பதை பற்றறியும் இந்த பதிவில் அறிவோம். *முதன்மையான உறுப்பு..!* நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதில் மிக முக்கிய ஒன்றாக இதயம் சார்ந்த நோய்களும் அடங்கும். நம்மில் அதிகமானோர் விபரீதத்தின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதய நோய்களில் இந்த பருப்பு வகைகள் காக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். *ஆரோக்கியமான உணவுகள்...* பல வகையான உணவுகள் இங்கு இருந்தாலும், ஒரு சில உணவுகளே நம் உடல் நலத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது. அந்த வகையில் இந்த நட்ஸ்களும் அடங்கும். இவற்றில் எண்ணற்ற நலன்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பொட்டாசியம் மெக்னீசியம் ஃபோலேட் வைட்டமின் பி, ஈ செலினியம் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. *வால்நட்ஸ்;* ஏராளமான நன்மைகள் இந்த வால்நட்ஸில் உள்ளதாம். தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் எந்த வித பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும், இதில் அதிக ளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே, இரத்தம் உறைவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டது. *பிஸ்தா;* சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான பருப்பு வகைகளில் இந்த பிஸ்தாவும் ஒன்று. தினமும் பிஸ்தா சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். இதில், குறைந்த அளவே கிளைசெமிக் இன்டெஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. *பாதாம்;* கெட்ட கொலஸ்டரோலை குறைக்கும் தன்மை இந்த பாதாமிற்கு இருக்கிறதாம். அத்துடன் நார்சத்து, மெக்னீசியம், காப்பர், கால்சியம், பொட்டாசியம் போன்ற இதயத்தை பத்திரமாக பார்த்து கொள்ளும் முக்கிய ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது. அர்ஜினைன் என்ற முக்கிய அமினோ அமிலம் இதில் இருப்பதால், ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து, ரத்தம் செல்லும் பாதையை சீராக வைத்து கொள்ளும்.எனவே, ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வரமால் இருக்கும். *முந்திரி;* சமையலுக்கு அதிகம் சேர்க்க்கப்டும் இந்த முந்திரியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஈ அதிகம் இதில் நிறைந்துள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அடியோடு தடுத்து விடுமாம். மேலும், ஆரோக்கியமான உடல் அமைப்பையும் இது தரும். *ஹஸில்நுட்ஸ்;* ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள இந்த ஹஸில்நுட்ஸ் உதவும். இவற்றில் ஒலிக் ஆசிட் என்ற முக்கிய அமிலம் இருக்கிறது. இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை குறைக்க நன்கு பயன்படும். மேலும், இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மாரடைப்பு போன்றவை வராமல் காக்கும். *வேர்க்கடலை;* ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். மேலும், இதயத்தின் செயல்பாட்டை சீராக நடத்த இவை வழி செய்யும். வேக வைத்த வேர்க்கடலை, பீனட் பட்டர் போன்றவை நல்ல உணவு பொருட்களாகும். *ப்ரசிலியன் நட்ஸ்;* அதிக சத்துக்கள் இந்த வகை நட்ஸ்களில் உள்ளதாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான உடல் நலனை பெற இந்த பிரேசிலின் நட்ஸ்கள் பயன்படும். மேலும், இதய கோளாறுகள் ஏற்படாமலும் இவை தடுக்குமாம். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள். இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் நட்ஸ்(பருப்பு) வகைகள் அனைத்தும் கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
*தினமும் 3 துண்டு உல
*தினமும் 3 துண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?* *நல்லது மட்டும் இயற்கை அங்காடி, * *கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், * *திண்டுக்கல்* தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_ நல்லது மட்டும்-ன் குழுவில் இணைய இதை சொடுக்கவும்.. (கிளிக் செய்யவும்..) 👇 https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t அத்திப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே நாம் பலரும் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுகிறோம். இன்னொன்று, அந்த பழத்தை இரண்டாகப் பிளந்தால் முழுக்க முழுக்க விதைகளாக, புழுக்களைப் போல் இருக்கும். அதுவும் சிலருக்கு அருவருப்பாக இருப்பதால் தவிர்த்து விடுகிறார்கள். *எங்கே கிடைக்கும்?;* இதன் ஆரோக்கியம் கருதி சாப்பிட்டாலும், பிரஷ்ஷான பழம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. அதற்காகவே தற்போது உலர்த்தி பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் எல்லா இடங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன. அதனால் எல்லா பருவ காலங்களிலும் நம்மால் அத்திப்பழத்தை சாப்பிட முடியும். *அத்திப்பழம்;* பலரும் உலர் பழங்கள், நட்ஸ் என்றாலே முந்திரி, உலர் திராட்சை, பாதாம் ஆகியவற்றோடு நின்று விடுகிறார்கள். இந்த பழத்தைப் பார்த்தாலும் அதன் நிறம், வடிவம், தோற்றம் பலருக்கும் பிடிக்காததால் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் மற்ற உலர் பழங்களை விடவும் அத்திப் பழத்தில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் இனி மற்ற உலர் பழங்களுக்குப் பதிலாக அதிகமாக அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். *செரிமான சக்தி;* உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 3 துண்டுகள் அளவுக்கு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது. இதர செரிமானப் பிரச்சினைகளும் குறையும். குடலியக்கமும் சீராகும். *எடை இழப்பு;* உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் தாராளமாக உலர்ந்த அத்திப்பழத்தைச் சாப்பிடலாம். உலர் அத்தியில் அதிக நார்ச்சத்து இருப்பதோடு கலோரியும் மிகமிக குறைவு. ஒரு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது நம்முடைய உடலில் 0.2 கிராம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஸ்நாக்ஸ் டைமில் இந்த அத்திப்பழத்தை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். *ரத்த அழுத்தம்;* உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தீர்கள் என்றால், உடலில் சோடியத்தின் அளவும் அதிகரிக்கும். அப்படி உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்தது என்றால், அதன் காரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உலர் அத்திப்பழத்தில் சோடியம் மிகமிக குறைவு என்பதால், உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். *ஆன்டி ஆக்சிடண்ட்;* உலர் அத்திப்பழத்தில் மிக மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. குறிப்பாக, மற்ற பழங்களை விட இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. அதோடு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. *இதய நோய்கள்;* உலர் அத்தியில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால், ஃபீரி ரேடிக்கல்களால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய் தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் குறைவதால், கரோனரி என்னும் இதய நோயின் தாக்கமும் குறைவாக இருக்கிறது. *புற்றுநோய்;* இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால், டீஎன்ஏ பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. புற்றுநோய் உண்டவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. *எலும்புகளின் வலிமை;* ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்திருக்கிறது. இது ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான கால்சசியத்தின் அளவாகும். இதனால் ஒரு நாளைக்கு ஒரு உலர்ந்த அத்திப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலிமையாக ஆரம்பிக்கும். *நீரிழிவு;* உலர்ந்த அத்திப்பழம் கொஞ்சம் இனிப்புசுவையுடையது. அதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் வருவதுண்டு. ஆனால் இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதேசமயம் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் சாப்பிடலாம் என்று ஆலோசித்து அந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். *ரத்த சோகை;* உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2 சதவீதம் அளவுக்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபிளை எடுத்துச் செல்ல, கனிமச்சத்துக்கள் இன்றியமையாதது. எனவே தினமும் ஒரு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அதிகரித்து, ரத்தசோகை வருவதும் தடுக்கப்படும். *பாலுணர்ச்சி தூண்டல்;* கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வு ஊக்கியாகச் செயல்படுகிறது என்று சாப்பிட்டு வந்தனர். அத்திப்பழமானது ஒரு புனித பழமாகவும் காதல் மற்றும் கருவுறுதலுக்கான பழமாகவும் கருதினர். இது பாலுணர்வைத் தூண்டச் செல்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவிலான ஜிங்க், மாங்கனீசு ஆகியவை இனப்பெருக்க மண்டலத்தை அதிகரிக்கச் செய்கிறது. இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் அத்திப்பழம் மற்றும் முந்திரி, உலர் திராட்சை, பாதாம் கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
*ஆவாரம்பூவை இப்படி ட
*ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் ஆயுள் இரட்டிப்பாகுமாம்... செய்முறை உள்ளே...* நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம். ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும். நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_ நல்லது மட்டும்-ன் குழுவில் இணைய இதை சொடுக்கவும்.. (கிளிக் செய்யவும்..) 👇 https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t *வளரும் இடம்;* ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது. *அடங்கியவை;* ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன. *மலச்சிக்கல்;* மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும். *சருமத் தொற்று;* நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம். *சிறுநீர் தொற்று;* ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும். *காய்ச்சல்;* அதிகப்படியான மருத்துவு குணங்கள் கொண்ட ஆவாரம்பூ தேநீரை தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும். *நீரிழிவு நோய்;* பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும். ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். *மேனி பளபளப்பு;*; ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும். *வயிற்றுப்புண்;* காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும். இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் ஆவாரம்பூ மற்றும் ஆவாரம்பூ பொடி கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
Page 1 24.33

Updates