http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3

Updates found with 'https'

Page  1 1

Updates found with 'https'

திப்பிலி பற்றி தெரியுமா? எந்தெந்த நோய்க்கெல்லாம் தி்ப்பிலியை சாப்பிடலாம்?சளி, இருமல் ஆகியவை வாழ்நாள் முழுக்க நம்மைத் தொடர்ந்து வருகின்ற ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆகும். இவற்றைச் சரி செய்வதற்கு நாமும் ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டு அதை அப்படியே அடக்கி வைத்து விடுகிறோம். நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல்தொடர்புக்கு:7397792811 7397792812FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattumGOOGLE: https://goo.gl/posts/szvakYOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6tஅது உள்ளேயே தேங்கித் தேங்கி நெஞ்சு சளியாகவும் ஆஸ்துமாகவும் மாறிவிடும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.சளித்தொல்லை; சளி என்பது நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற அசுத்தங்களையும் சேர்த்தே வெளியேற்றும். அதனால் சளி பிடித்தால் அதை முழுமையாக வெளியேற்ற வழி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு நாமோ அதை அடக்குவதற்கான மாத்திரை போட்டு உள்ளே தள்ளிவிடுகிறோம். அது அப்படியே நம்முடைய உடலுக்குள் தேங்க ஆரம்பித்துவிடும்.திப்பிலியின் அற்புதங்கள்; சளி, இருமல் மற்றும் இளைப்பு ஆகிய முக்கிய நோய்களுக்கு ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் இயற்கையாகக் கிடைக்கின்ற மூலிகைகள் தான் மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கும். சில முக்கிய மூலிகைகளின் வழியாக நாம் மிக எளிதாக நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திப்பிலி. இந்த திப்பிலி மிகவும் கொடிய நீண்ட நாள் சளியைக் கூட வெளியேற்றி விடும்.எங்கு கிடைக்கும்? திரிகடுகம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகள் சேர்ந்தது. அந்த மூன்றில மிக முக்கியமானதும் வீரியம் மிக்கதும் தான் இந்த திப்பிலி. இந்த திப்பில் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் மிக எளிதாகவே கிடைக்கும். முழு மூலிகையாகவும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். திப்பிலிக்குள் எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெயைக் கொண்டுள்ளது. இது பல நோய்களைக் குணப்படுத்துகின்ற அரிய மருந்தாக இருக்கிறது.நோய்கள்; திப்பிலி எனும் அற்புத மூலிகையானது மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், பித்த நீர்ப்பையில் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றை திப்பிலி குணப்படுத்தும்.தாது இழப்பு; கொஞ்சம் திப்பிலியை எடுத்து வறுத்துப் பொடி செய்து, அதனுடன் கொஞ்சம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், இருமல், தொண்டைக் கமறல், உடல் வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.வயிற்றுப் பொருமல்; சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சரியான அளவில் கொஞ்சம் திப்பிலியை எடுத்து, அதை வறுத்துப் பொடியாக்கி, சிறிது தேனுடன் கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வர, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.இளைப்பு நோய்; திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, அதே சம அளவுக்கு கடுக்காய் பொடியையும் சம அளவும் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு தேன் விட்டுப் பிசைந்து, இலந்தை பழத்தின் அளவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் இருந்து வந்த இளைப்பு நோய் கூட தீரும்.சுவையின்மை; திப்பிலி் பொடியை எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை அளவுக்கு சாப்பிட்டு வந்தால், சிலருக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரையிலும் தொண்டை கட்டிக் கொண்டு இருத்தல், கோழைப்படுதல், குரலில் கம்மல் கொள்ளுதல், உணவில் சுவையில்லாமல் இருத்தல் ஆகியவை ஏற்படும்.குடல் புழுக்கள்;திப்பிலி பொடியை எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அது குழந்தைகளின் குடலில் உள்ள புழுக்களை அகற்ற சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.பாலூட்டும் தாய்மார்கள்;புதிதாகக் குழந்தை பெற்றுக் கொண்ட, பாலூட்டும் தாய்மார்கள் வெதுவெதுப்பான நீருக்குள் திப்பிலி பொடியினைக் கலந்து கொடுத்தால் அவர்களுக்கு உண்டாகும் ரத்தப் போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை சரியாகும்.பசியின்மை; மிளகுடன் சம அளவுக்கு திப்பிலி பொடியும் கலந்து சாப்பிட்டு வந்தால், மயக்கம் மற்றும் உணர்ச்சி இல்லாமல் இருக்கும்போது, உணர்வைத் தூண்டிவிடும் மருந்தாகப் பயன்படுகிறது.சுவாசக் கோளாறுகள்;தொடர்ந்து சளித் தொல்லையினால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நாளடைவில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அப்படி சுவாசப் பிரச்சினைகள் இருக்கின்ற பொழுது, திப்பிலிப் பொடியை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வர, சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும். இது எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி🍃 நம்மிடம் திப்பிலிபொடி கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
*ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் ஆயுள் இரட்டிப்பாகுமாம்... செய்முறை உள்ளே...*நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம். ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும்.இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும்.நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல்தொடர்புக்கு:7397792811 7397792812FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattumGOOGLE: https://goo.gl/posts/szvakYOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t*வளரும் இடம்;*ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது.*அடங்கியவை;*ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன.*மலச்சிக்கல்;*மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.*சருமத் தொற்று;* நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம்.*சிறுநீர் தொற்று;*ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.*காய்ச்சல்;* அதிகப்படியான மருத்துவு குணங்கள் கொண்ட ஆவாரம்பூ தேநீரை தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.*நீரிழிவு நோய்;* பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும். ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.*மேனி பளபளப்பு;*; ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும்.*வயிற்றுப்புண்;* காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும்.இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி🍃 நம்மிடம் ஆவாரம்பூ மற்றும் ஆவாரம்பூ பொடி கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
*தினமும் 3 துண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?**நல்லது மட்டும் இயற்கை அங்காடி, **கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், **திண்டுக்கல்*தொடர்புக்கு:7397792811 7397792812FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattumGOOGLE: https://goo.gl/posts/szvakYOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6tஅத்திப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே நாம் பலரும் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுகிறோம்.இன்னொன்று, அந்த பழத்தை இரண்டாகப் பிளந்தால் முழுக்க முழுக்க விதைகளாக, புழுக்களைப் போல் இருக்கும். அதுவும் சிலருக்கு அருவருப்பாக இருப்பதால் தவிர்த்து விடுகிறார்கள்.*எங்கே கிடைக்கும்?;*இதன் ஆரோக்கியம் கருதி சாப்பிட்டாலும், பிரஷ்ஷான பழம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. அதற்காகவே தற்போது உலர்த்தி பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் எல்லா இடங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன. அதனால் எல்லா பருவ காலங்களிலும் நம்மால் அத்திப்பழத்தை சாப்பிட முடியும்.*அத்திப்பழம்;*பலரும் உலர் பழங்கள், நட்ஸ் என்றாலே முந்திரி, உலர் திராட்சை, பாதாம் ஆகியவற்றோடு நின்று விடுகிறார்கள். இந்த பழத்தைப் பார்த்தாலும் அதன் நிறம், வடிவம், தோற்றம் பலருக்கும் பிடிக்காததால் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் மற்ற உலர் பழங்களை விடவும் அத்திப் பழத்தில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் இனி மற்ற உலர் பழங்களுக்குப் பதிலாக அதிகமாக அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.*செரிமான சக்தி;*உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 3 துண்டுகள் அளவுக்கு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது. இதர செரிமானப் பிரச்சினைகளும் குறையும். குடலியக்கமும் சீராகும்.*எடை இழப்பு;*உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் தாராளமாக உலர்ந்த அத்திப்பழத்தைச் சாப்பிடலாம். உலர் அத்தியில் அதிக நார்ச்சத்து இருப்பதோடு கலோரியும் மிகமிக குறைவு. ஒரு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது நம்முடைய உடலில் 0.2 கிராம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஸ்நாக்ஸ் டைமில் இந்த அத்திப்பழத்தை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.*ரத்த அழுத்தம்;*உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தீர்கள் என்றால், உடலில் சோடியத்தின் அளவும் அதிகரிக்கும். அப்படி உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்தது என்றால், அதன் காரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உலர் அத்திப்பழத்தில் சோடியம் மிகமிக குறைவு என்பதால், உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும்.*ஆன்டி ஆக்சிடண்ட்;*உலர் அத்திப்பழத்தில் மிக மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. குறிப்பாக, மற்ற பழங்களை விட இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. அதோடு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.*இதய நோய்கள்;*உலர் அத்தியில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால், ஃபீரி ரேடிக்கல்களால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய் தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் குறைவதால், கரோனரி என்னும் இதய நோயின் தாக்கமும் குறைவாக இருக்கிறது.*புற்றுநோய்;* இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால், டீஎன்ஏ பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. புற்றுநோய் உண்டவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.*எலும்புகளின் வலிமை;*ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்திருக்கிறது. இது ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான கால்சசியத்தின் அளவாகும். இதனால் ஒரு நாளைக்கு ஒரு உலர்ந்த அத்திப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலிமையாக ஆரம்பிக்கும்.*நீரிழிவு;*உலர்ந்த அத்திப்பழம் கொஞ்சம் இனிப்புசுவையுடையது. அதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் வருவதுண்டு. ஆனால் இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதேசமயம் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் சாப்பிடலாம் என்று ஆலோசித்து அந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.*ரத்த சோகை;*உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2 சதவீதம் அளவுக்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபிளை எடுத்துச் செல்ல, கனிமச்சத்துக்கள் இன்றியமையாதது. எனவே தினமும் ஒரு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அதிகரித்து, ரத்தசோகை வருவதும் தடுக்கப்படும்.*பாலுணர்ச்சி தூண்டல்;*கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வு ஊக்கியாகச் செயல்படுகிறது என்று சாப்பிட்டு வந்தனர். அத்திப்பழமானது ஒரு புனித பழமாகவும் காதல் மற்றும் கருவுறுதலுக்கான பழமாகவும் கருதினர். இது பாலுணர்வைத் தூண்டச் செல்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவிலான ஜிங்க், மாங்கனீசு ஆகியவை இனப்பெருக்க மண்டலத்தை அதிகரிக்கச் செய்கிறது.இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி🍃 நம்மிடம் அத்திப்பழம் மற்றும் முந்திரி, உலர் திராட்சை, பாதாம் கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
இதய கோளாறுகளை தடுக்கணுமா...? அப்போ தினமும் இந்த நட்ஸ்(பருப்பு)களை சாப்பிட்டு வாருங்கள்...*நல்லது மட்டும் இயற்கை அங்காடி, *கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல்தொடர்புக்கு:7397792811 7397792812FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattumGOOGLE: https://goo.gl/posts/szvakYOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6tநம் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய நவீன உலகில், உடல் நலத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் நாம் ஒரு இயந்திரம் போல பணத்தை மட்டுமே சம்பாதித்து கொண்டிருக்கின்றோம். இது நிச்சயம் ஆரோக்கியமான சூழலையும், நலமான உடல் அமைப்பையும் தராது. உடல் உறுப்புகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த இதயம் தான்.இதன் துடிப்பு நின்று விட்டால் நாம் எல்லோரும் அவ்வளவுதான். இதயத்தை நம்மில் பலர் கண்டுகொள்வதே இல்லை. இது பல்வேறு வகையான பின்விளைவுகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எவ்வாறு நாம் இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த பருப்பு வகைகள் இதயத்தை நலமாக பார்த்து கொள்ளும் என்பதை பற்றறியும் இந்த பதிவில் அறிவோம்.*முதன்மையான உறுப்பு..!* நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதில் மிக முக்கிய ஒன்றாக இதயம் சார்ந்த நோய்களும் அடங்கும். நம்மில் அதிகமானோர் விபரீதத்தின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதய நோய்களில் இந்த பருப்பு வகைகள் காக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.*ஆரோக்கியமான உணவுகள்...* பல வகையான உணவுகள் இங்கு இருந்தாலும், ஒரு சில உணவுகளே நம் உடல் நலத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது. அந்த வகையில் இந்த நட்ஸ்களும் அடங்கும். இவற்றில் எண்ணற்ற நலன்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பொட்டாசியம் மெக்னீசியம் ஃபோலேட் வைட்டமின் பி, ஈ செலினியம் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன.*வால்நட்ஸ்;* ஏராளமான நன்மைகள் இந்த வால்நட்ஸில் உள்ளதாம். தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் எந்த வித பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும், இதில் அதிக ளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே, இரத்தம் உறைவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டது.*பிஸ்தா;* சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான பருப்பு வகைகளில் இந்த பிஸ்தாவும் ஒன்று. தினமும் பிஸ்தா சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். இதில், குறைந்த அளவே கிளைசெமிக் இன்டெஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.*பாதாம்;*கெட்ட கொலஸ்டரோலை குறைக்கும் தன்மை இந்த பாதாமிற்கு இருக்கிறதாம். அத்துடன் நார்சத்து, மெக்னீசியம், காப்பர், கால்சியம், பொட்டாசியம் போன்ற இதயத்தை பத்திரமாக பார்த்து கொள்ளும் முக்கிய ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது. அர்ஜினைன் என்ற முக்கிய அமினோ அமிலம் இதில் இருப்பதால், ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து, ரத்தம் செல்லும் பாதையை சீராக வைத்து கொள்ளும்.எனவே, ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வரமால் இருக்கும்.*முந்திரி;* சமையலுக்கு அதிகம் சேர்க்க்கப்டும் இந்த முந்திரியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஈ அதிகம் இதில் நிறைந்துள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அடியோடு தடுத்து விடுமாம். மேலும், ஆரோக்கியமான உடல் அமைப்பையும் இது தரும்.*ஹஸில்நுட்ஸ்;* ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள இந்த ஹஸில்நுட்ஸ் உதவும். இவற்றில் ஒலிக் ஆசிட் என்ற முக்கிய அமிலம் இருக்கிறது. இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை குறைக்க நன்கு பயன்படும். மேலும், இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மாரடைப்பு போன்றவை வராமல் காக்கும்.*வேர்க்கடலை;* ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். மேலும், இதயத்தின் செயல்பாட்டை சீராக நடத்த இவை வழி செய்யும். வேக வைத்த வேர்க்கடலை, பீனட் பட்டர் போன்றவை நல்ல உணவு பொருட்களாகும்.*ப்ரசிலியன் நட்ஸ்;* அதிக சத்துக்கள் இந்த வகை நட்ஸ்களில் உள்ளதாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான உடல் நலனை பெற இந்த பிரேசிலின் நட்ஸ்கள் பயன்படும். மேலும், இதய கோளாறுகள் ஏற்படாமலும் இவை தடுக்குமாம். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி🍃 நம்மிடம் நட்ஸ்(பருப்பு) வகைகள் அனைத்தும் கிடைக்கும்🌱
Send Enquiry
Read More
முகர்ந்தாலே பல நோய்களை குணப்படுத்தும் திருநீற்றுப் பச்சிலை... உங்க வீட்ல இல்லயா?ரொம்ப நாளா உங்க வீட்ல வெச்சிருக்கிற செடிகள் சரியா வளராம இருக்கா? இல்ல பூச்செடிகள் சரியா பூக்காம இருக்கா? அப்படி இருந்தா இந்த திருநீற்றுப் பச்சிலை செடியில் இருந்து நான்கே நான்கு இலைகளை மட்டும் பறித்துக் கொண்டு போய், அந்த செடிகளுக்கு அருகில் வைத்தால், அப்புறம் பாருங்கள் செடிகள் எப்படி வளர்கிறது, எப்படி பூக்கிறது என்று.அவ்வளவு அற்புதங்கள் செய்யும் இந்த பச்சிலை பற்றி இன்னும் சில அற்புதங்களைப் பற்றி சொல்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள் நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல்தொடர்புக்கு:7397792811 7397792812FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattumGOOGLE: https://goo.gl/posts/szvakYOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/திருநீற்றுப் பச்சிலை:திருநீற்றுப் பச்சிலை மிகவும் வாசனை மிகுந்த தாவரம். இதனுடைய பிறப்பிடமே தெற்கு ஆசியாவிலுள்ள இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தான். இந்த இலையைக் கசக்கி முகர்ந்ர் பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்து. குறிப்பாக, ரத்த வாந்தியைக் கூட கட்டப்படுத்தும்.பேன் மற்றும் பொடுகு:தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாறை தனியாகவோ அல்லது எண்ணெயில் கலந்தோ தேய்த்து தலைக்குக் குளித்து வாருங்கள். பேன், பொடுகுத் தொல்லை போயே போயிடும்.முகப்பருக்கள்;பரு வயதுடையவர்களுக்கு முக்கிய பிரச்னையே இந்த பருக்கள் தான். குறிப்பாக, பெண்களுக்கு இதனால் உண்டாகும் தொல்லை மிக அதிகம். சிலர் பருவைப் போக்க ஏதாவது கெமிக்கல் நிறைந்த க்ரீம்களைப் போட்டு, முகத்தில் பரு இருந்த இடம் புண்ணாகிவிடுகிறது. கரும்புள்ளிகளும் வந்து விடுகின்றன. அத்தகைய பிரச்சினைகளுக்கு இந்த திருநீற்றுப் பச்சிலை மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த இலையை கைகளால் கசக்கி, அதனுடைய சாறினை முகத்தில் தடவினாலே போதும் பருக்கள் காணாமல் போய்விடும். அதன் தடமும் மறை்நது விடும்.கண் பிரச்சினைகள்;சாதாரணப் பருக்கள் மட்டுமின்றி, புரையோடி சீழ்வைத்த பருக்களாக இருந்தால் கூட குணப்படுத்தும். அதோடு மட்டுமல்லாது, கண்கட்டி போன்ற சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதனுடைய சாறு மிகச்சிறந்த தீர்வைத் தரும்.வயிற்றுப்பூச்சிகள்;திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான் சியா விதைகள் என்ற பெயரில் விறகப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையதுசிறுநீர் பெருக்கி;சிறுநீர் பெருக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.மூலப்பொருள்கள்;திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இதில் மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்டது. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது, சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால், மெத்தில் ஈகிய ஏராளமான மூலப்பொருள்கள் இதற்குள் இருக்கின்றன.
Send Enquiry
Read More
நல்லது மட்டும் இயற்கை அங்காடிதிண்டுக்கல் 7397792811 கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும்.கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் https://www.facebook.com/nallathumattum.dglhttps://twitter.com/nallathumattumhttps://www.youtube.com/watch?v=4u-arym8h14பெருங்குடல் புற்றுநோய்கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.மார்பக புற்றுநோய்கைக்குத்தல் அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.கொழுப்பை குறைக்கிறதுகைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.இதய நோய்நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உடல் எடையை பராமரிக்ககைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மலச்சிக்கலை தடுக்கஇந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம்.நீரிழிவை கட்டுப்படுத்தகைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.ஆரோக்கியமான எலும்புகள்கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது.ஆஸ்துமாமெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமாவைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.பித்தக்கற்கள்கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலை குறைக்க உதவுகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது, ஆரோக்கியமான நரம்பு மண்டலம்கைக்குத்தல் அரிசி, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.உணவு முறை தேவைகள்உணவு முறை வழிகாட்டி நாளொன்றுக்கு முழு தானியங்கள் 3 சேவைகள் உட்கொள்ள பரிந்துரைக்கிறது. ஒரு 1/2 கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு, அந்த மூன்று சேவைகளில் ஒன்றிற்கு சமம். அதனால் தினசரி உணவின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கைக்குத்தல் அரிசிச்சோறு ஒரு நல்ல உணவு.
Send Enquiry
Read More
நல்லது மட்டும் இயற்கை அங்காடி திண்டுக்கல் 7397792811 மூங்கில் அரிசி... இயற்கையின் அற்புதக் கொடை!நெல் போலவே இருக்கும்.*பழங்குடி மக்களின் முக்கிய உணவு.*60 வயதான மரத்தில்தான் கிடைக்கும்.*உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்.எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் https://www.facebook.com/nallathumattum.dglhttps://twitter.com/nallathumattumhttps://www.youtube.com/watch?v=4u-arym8h14வாழையடி வாழையாக வாழ்க... மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க’ என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன.அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்... தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.1)உடலில் இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி மூங்கில் அரிசிக்கு உண்டு.2) மூங்கில் அரிசியை சாப்பிட்டா கழுத்து வலி , இடுப்பு வலி எல்லாம் சரியாகும்.3) மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும் , வீரியத்தையும் கொடுக்கும்.4) மூங்கில் அரிசியில் மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.5) உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது.6) பசியைக் குறைக்கும் . ஆற்றலைப் பெருக்கும்.7) உடல் எப்போதும் உரமாகவும் , ஊட்டமாகவும் இருக்க உதவும்.8) மூங்கில் அரிசியை தினையரிசி , சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து சாப்பிடலாம்.9) தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு சுகமளிக்கும்.
Send Enquiry
Read More
Page 1 1