http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3

Updates found with '10'

Page  1 1

Updates found with '10'

உங்கள் “நல்லது மட்டும்” இயற்கை உணவகத்தில்…1)வெள்ளைச் சோள கொழுக்கட்டை 2)இருங்குச் சோள கொழுக்கட்டை 3)தினை அரிசி கொழுக்கட்டை 4)வரகு அரிசி கொழுக்கட்டை 5)அரிசி மாவு கொழுக்கட்டை 6)சிவப்பு அரிசி கொழுக்கட்டை 7)கோதுமை கொழுக்கட்டை 8)மாப்பிளை சம்பா கொழுக்கட்டை9) உளுந்தங்களி 10) ) வரகு உருண்டை 11)எள்ளு உருண்டை 12)ராகி உருண்டை 13)தினை உருண்டை 14)அவுல் உருண்டை 15)கொள்ளு உருண்டை 16)கம்பு உருண்டை 17)பாசிப்பருப்பு உருண்டை 18) அமுல் கேக் 19)நவதானிய வடை 20)வாழைப் பூ வடை 21)பொன்னாங்கண்ணி கீரை வடை 22)கருப்புச் சுண்டல் வடை 23)வெள்ளை சுண்டல் வடை 24) கருப்பட்டி சோள அல்வா 25)புரூட் அல்வா 26)பீட்ரூட் அல்வா27)கேரட் அல்வா28)கருப்பட்டி கம்பு அல்வா 29)பாதாம் அல்வா 30)கருப்பட்டி கோதுமை அல்வா31) மில்க் கருப்பட்டி அல்வா32)கம்பு முறுக்கு 33)சோள முறுக்கு 34) பூண்டு முறுக்கு35) வெங்காய முறுக்கு36)கம்பு மாவு சீவல் 37)புதினா மிக்ஸ்ர் 38) கருப்பட்டி ஜிலேபி39) அவுல் முந்திரி40) இள பக்கோடா41) மில்க் படா 42) கவுனி லட்டு43) மில்க் லட்டு 44)மைசூர் பாகு 45)தட்டை 46)மில்க் பர்பி 47) சோமாசு48) போலி49) கருப்பட்டி குளோப் ஜாமூன்50) கருப்பட்டி பால் அல்வா51)காளான் பிரியாணி வரகு அரிசியில்52)காளான் 6553)காளான் மசால் 54)காளான் மஞ்சூரியன்55)ஜிஞ்சர் காளான்56)கார்லிக் கோபி 57)காளி பிளவர் மஞ்சூரியன்58)காளி பிளவர் கோபி மசாலா59)வெஜ் கோலா 60)பாகற்காய் சுக்கா 61)பேபிக்கான் 65 62)தானிய அரிசி பாயசம்சூப் வகைகள்1)பொன்னாங்கண்ணி சூப் 2)அருகம்புல் சூப் 3)மணத்தக்காளி சூப்4)வல்லாரை சூப்5)தூதுவளை சூப்6)நெல்லி சூப்7)முடக்கற்றான் சூப்8)முருங்கை சூப்9)பூண்டு சூப்10)கொள்ளு சூப்11)கருவேப்பிலை சூப்12)கரிசலாங்கண்ணி சூப்13)செம்பருத்தி சூப் 14)நாவல் சூப்15)அத்திப்பழம் சூப்16)வாழைத்தண்டு சூப்சாறு வகைகள்1)வாழைத் தண்டு சாறு 2)சோற்றுக் கற்றாழை சாறு 3)துளசி சாறு 4)தூதுவளை சாறு 5)நாவல் சாறு 6)அத்திப்பழம் சாறு 7)நெல்லி சாறு 8)பாகற்காய் சாறு 9)பிரண்டை சாறு10)அருகம்புல் சாறு 11)முருங்கை சாறுசர்பத் வகைகள் 1)நன்னாரி சர்பத் 2)மாதுளை சர்பத் 3)செம்பருத்தி சர்பத் 4)தாமரைப் பூ சர்பத்5)நெல்லி சர்பத் 6)லெமன் சர்பத் 7)வல்லாரை சர்பத் 8)வில்வம் சர்பத்இயற்கை அங்காடியில்….1)ராகி தோசை மிக்ஸ்/Ragi Dosa Mix2)சாமை தோசை மிக்ஸ்/Little Dosa Mix 3)குதிரைவாலி தோசை மிக்ஸ்/Banyard Dosa Mix4)வரகு தோசை மிக்ஸ்/Varagu Dosa Mix5)சோளம் தோசை மிக்ஸ்/Cholam Dosa Mix6)கம்பு தோசை மிக்ஸ்/Pearl Dosa Mix7)தினை தோசை மிக்ஸ்/Foxtail Dosa Mix8)சிவப்பு அரிசி தோசை மிக்ஸ்/Red Rice Dosa Mix9)சிறு தானிய பணியார மிக்ஸ்/Siru Dhaniya paniyara Mix10)சிறு தானிய அடை மிக்ஸ்/Siru Dhaniya Adai Mix11)ராகி புட்டு மிக்ஸ்//Ragi Puttu Mix12)சிவப்பு அரிசி புட்டு மிக்ஸ்/Red Rice Puttu Mix13)முளைக் கட்டிய நவ தானிய கஞ்சி மிக்ஸ்/Mulai Kattiya Nava Dhaniya Kanji Mix15)கொள்ளு கஞ்சி மிக்ஸ்/Barli Kanji Mix16)மூங்கிலரிசி பஞ்ச மூட்டி கஞ்சி மிக்ஸ்/Moongilarisi Panja Mooti Mix 17)பனை வெல்லம் குக்கீஸ்/Palm Sugar Cookies18)குதிரைவாலி குக்கீஸ்/Barnyard Cookies19)கம்பு குக்கீஸ்/Pearl Cookies20)வரகு குக்கீஸ்/Varagu Cookies 21)தேன் தினை குக்கீஸ்/ Then Foxtail Cookies 22)தினை பருத்திப் பால்/Foxtail Millet Cotton Seeds Milk23)கோதுமை சேமியா/Wheat Semiya 24)தினை சேமியா/Foxtail Semiya25)குதிரைவாலி சேமியா /Barnyard Semiya26)கம்பு சேமியா/Pearl Semiya27)சாமை சேமியா/Samai Semiya28)தினை ரஸ்க்/Foxtail Rusk29)குதிரைவாலி ரஸ்க்/Barnyard Rusk30)சாமை ரஸ்க்/Little Rusk31)நவதானியம் ரஸ்க்/Multi Grain Rusk32)சாமை கம்பு முருங்கை தோசை மாவு/Samai Pearl Moringa Dosa Flour33)நவதானியம் வரகு வாழைப்பூ தோசை மாவு/Multi Grain Varagu Vazhapphu Dosa Flour34)குதிரைவாலி கரிசலாங்கண்ணி கேழ்வரகு தோசை மாவு/Barnyard karisalangani kelvaragu Dosa Flour 35)முடக்கற்றான் குதிரைவாலி தோசை மாவு/Mudakkatran Barnyard Dosa Flour36)நவதானியம் மாப்பிளை சம்பா வல்லாரை தோசை மாவு/ Mapilai Samai Vallarai Dosa Flour made with Nine Grain 37)நவதானியம் மாப்பிளை சம்பா முடக்கற்றான் அடை மாவு/ Mapilai samba Mudaktran Adai Flour made with Nine Grain38)பிரண்டை வரகு தோசை மாவு/Pirandai Varagu Dosa Flour39)கம்பு கூலு/Pearl Coozh40)ராகி கூலு/Ragi Coozh41)உளுந்தங் கஞ்சி/Urad Dal Kanji 42)சிவப்பு அரிசி கோதுமை கஞ்சி/Red Rice Wheat Kanji43)தினை சாமை கஞ்சி/Foxtail Samai Kanji 44)தினை புட்டு மாவு/Foxtail Puttu Flour45)கம்பு தோசை மிக்ஸ்/Pearl Dosa Mix46)குள்ளக்கர் தோசை மிக்ஸ்/Kullakar Dosa Mix47)காட்டுயானம் தோசை மிக்ஸ்/Kaatuyanam Dosa Mix48)கவுனி இனிப்பு தோசை மிக்ஸ்/Kavuni Sweet Dosa Mix49)மாப்பிளை சம்பா தோசை மிக்ஸ்/Mappilai Samba Dosa Mix50)கொள்ளு மாப்பிள்ளை சம்பா அவுல் கஞ்சி மிக்ஸ்/Kollu Mappilai Samba Avul Kanji Mix51)ராகி கிட்சிலி சம்பா கூலு மிக்ஸ்/Ragi Kitchili Samba Coozh Mixமேலும் தொடர்புக்கு…. நல்லது மட்டும்R. கார்த்திகேயன்Cell No:+91 7397792811Phone No:0451 2432854
Send Enquiry
Read More
நெல்லிக்காய் நீள் பதிணென் குட்டமந்தம்வல்லைகலிசை குன்ம வாயு கண்ணோய்-பொல்லாவிடக்கடிவன் மேகநோய் வீறுசுரம் பேதிதிடக் கிரகணி கபம் போம் தேர் --பிணி தீர்க்கும் மூலிகை பாடல்முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டுநெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் உண்டு. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு அப்பிள் பழத்தில் உள்ளதை விட அதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது. நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும்.நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.நெல்லிக்கனியின் மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் `சி` உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் `சி`, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லியில் அப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி என்பன நிறைந்துள்ளது.ஆஸ்துமா, நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய் சாறு.நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும்.மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
Send Enquiry
Read More
மண்பாண்டத்தின் மகிமை: ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும். ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும். குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது.அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும். மண்பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சி கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.மண்பாண்டத்தை பராமரித்தல்:புதிய மண்பாண்டத்தை முதல் இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த பாண்டத்தை வடித்த கஞ்சி மூலம் இரண்டு நாட்கள் ஊறவைப்பதன் மூலம் புதிய மண்பாண்டத்தை பக்குவத்திற்கு கொண்டு வந்து சமைக்கலாம். மண்பாண்டத்தை சுத்தம் செய்வதற்கு தேங்காய் நார் மற்றும் எலுமிச்சம்பழம் போதுமானது. மண்பாண்டத்தை சுத்தம் செய்வதற்கு எந்த விதமான சோப்பு மற்றும் லிகுய்ட் உபயோகப்படுத்த கூடாது.1.குக்கர்/Cooker2.ஸ்க்ரபர்/Scrubber3.தோசை சட்டி/Inchsimple Tawa4.தயிர் பானை/Curd Pot5.கப் வகைகள்/Cup Items6.கடாய்/Kadai(Black& Red Color)7.பத்தி ஸ்டாண்ட்/Bathi Stand8.மாட விளக்கு/Mada Vilakku9.காமாட்சி விளக்கு/Kamatchi Vilakku10.தூபக் கல்/Dhoopak Kal11.சாப்பாட்டுத் தட்டு/Eating Plates12.குழம்பு பாத்திரம்/Black Hundi(Red& Black Color) 13.2-காய் தூக்கு/2-Kaai Thooku14.3-காய் தூக்கு/3-Kaai Thooku15.மெட்ராஸ் அடுப்பு/Madras Adupu16.துளசி மாடம்/Thulasi Maadam17.அஞ்சறைப் பெட்டி/Anjarai Petti18.மண்குடம்/Mann Kudam19.பீப்பாய்(2-Inch)/Peepai 2 Inch20.சுவர் கடிகாரம்/Wall Clock21.டெரகோட்டா குதிரை/Terracotta Horse22.தீபம் செட்/Deepam Set23.சிறிய தட்டு/Small Plates24.வாட்டர் பில்ட்டர்(20லி)/Water filter25.உருளி(3 Inch)/Uruli(3-Inch)26.உண்டியல்/Undiyal27.சோப்பு ஸ்டாண்ட்/Soap Stand28.வாட்டர் பாட்டில்/Watter Bottle29.வாட்டர் ஜக்/Water Jug30.ஹாட் பாக்ஸ்/Hot Box31.லஞ்ச் பாக்ஸ்/Lunch Box32.ஸ்பூன் வகைகள்/Spoon Items33.குருவாயூர் ஸ்பெஷல் விளக்கு/Guruvaayur special Vilakku34.குருவி கலயம்/Kuruvi Kalayamமேலும் பல…. தொடர்பு கொள்ள வேண்டிய கைப் பேசி எண்:7397792811
Send Enquiry
Read More
#பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லைஅன்புள்ள மக்களே!பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த கூட்டு பெருங்காயம் ... இந்த கூட்டு பெருங்காயம் ... அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது அந்த கூட்டு அல்ல. இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை. என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?ஒரு வகையான அராபிய பிசின் 60%, மைதா 30%, பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. "பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன். அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?வயிறு புண்ணாகும்....வயிற்றில் வாயு அதிகமாகும் ..நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.
Send Enquiry
Read More
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும்லேகியம் வகைகள் மற்றும் நோய்களின் பெயர்கள்1.அஸ்வகத்தி லேகியம்:பிரமேகம், வெட்டை, தாது நஷ்டம், உடல் சோர்வு2.தாதுபுஷ்டி:மேவெட்டை, தாது நஷ்டம், சோகை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் ஆரோக்கியத்திற்கு3.தாதுபுஷ்டி (ஸ்பெஷல்):அதிக சக்தியூட்டப்பட்ட மேவெட்டை, தாதுநஷ்டம், சோகை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் ஆரோக்கியத்திற்கு4.இஞ்சி:வாயு, பித்தம், வாந்தி, அஜீரணம், குன்மம், பசியின்மை5.கடுக்காய்:மூலவாயு, வயிற்றுப்புண், மலச்சிக்கல், (சுகபேதி லேகியம்)6.கண்டங்கத்தரி:சளி, இருமல், பனிக்கால ஜலதோஷம்7.கருணை:மூல நோய்கள்8.மூலாமிர்தம்:அனைத்து மூலநோய்கள்9.நெல்லிக்காய்:வாந்தி, பித்தம், வறட்சி, அதிக வியர்வை(அனைவருக்கும் ஏற்றது)10.சதாவரி (ஆயூர்):உடல் வறட்சி, வெள்ளைபடுதல், வெட்டை, அதிக உஷ்ணம்11.சௌபாக்ய சுண்டி (ஆயூர்):பிரசவத்தின் பின் ஏற்படும் அசதி, பசியின்மை, சோர்வு, பால் இன்மை, அஜீரணம், பித்தம், வாந்தி.12.தேத்தான் கொட்டை:மூலம், பௌத்திரம், வெள்ளை, வெட்டை, வாய்வு, பசிமந்தம்.13.தூதுளை:இருமல், சளி, சுவாச காசம், நுரையீரல் கோளாறுகள்14.வல்லாரை:நரம்புத்தளர்ச்சி, ஞாபக மறதி15.வான்குமரி:வெநீர் வெட்டை, இருமல், சளி, பசியின்மை, மலச்சிக்கல்.16.வெள்ளை பூண்டு:வாய்வு, அஜீரணம், வாத வலிகள்17.வெண்பூசணி:காமாலை, சோகை, வெள்ளை, நீர் சுருக்கு, அஸ்தி வெட்டை.18.வில்வாதி:வயிற்றுவலி, வாந்தி, பித்தம், விக்கல், குன்மம், வறட்டு இருமல்
Send Enquiry
Read More
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும்மூலிகை பொடி வகைகள் மற்றும் நோய்களின் பெயர்கள்1.ஆடா தோடா:இருமல், இளைப்பு, சுரம்.2.அதிமதுரம்:சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம்.3.அருகன்புல்;உடல் ஊட்டமின்மை, சொறி, சிரங்கு(இரத்த சுத்தி)4.அஸ்வகந்தா:நரம்பு தளர்ச்சி, விந்துவைப் பெருக்கி, உடலுக்கு பலம் தரும்.5.ஆவாரம்பூ:நீரிழிவு, வறட்சி, வெள்ளைபடுதல், பெரும்பாடு.6.தித்தரத்தை:குழந்தைகளின் சீதனம், இருமல், சுரம், கரப்பான், தலைநோய், வாயு.7.சுக்கு:வாய்வு, குன்மம், நீர் ஏற்றம், பல் வலி, காது குத்தல், சுவாச ரோகம், பசி உண்டாக்கும்.8.கடுக்காய்:மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுப்புண்.9.கண்டங்கத்தரி:இருமல், இளைப்பு, சுரம்.10.மஞ்சள் கரிசாலை:காமாலை, குரலுறுப்பு நோய், குட்டம், வீக்கம்.11.கருவேலம்பட்டை:பல்லாட்டம், ஈரில் ரத்தம் வடிதல்.12.கருவேப்பிலை:வாய் ருசியின்மை, வயிற்றுளைச்சல், பித்தம், சுரம்.13.காசினி கீரை:நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்.14.கஸ்தூரி மஞ்சள் பொடி:ஆறாத புண்கள், கரப்பான், நுண்புழுக்கள், வயிற்று நோய்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.15.கீழாநெல்லி :காமாலை, உடலில் உண்டாகும் வெப்பு, உடலில் ஊறிய மேகம், தாது வெப்பம் நீரிழிவு.16.குப்பை மேனி:புழுக்களை கொன்று கோழையை அகற்றி சொறி சிரங்குகளை போக்கும்.17.மணத்தக்காளி:வாய்ப்புண், வயிற்றுப்புண்(அல்ஸர்), இருமல், இளைப்பு.18.மருதம் பட்டை:இதயத்தை வன்மைப்படுத்தும், இளைப்பிருமல், கழிச்சல் கரங்கள்.19.முடக்கத்தான்:கீழ்வாதம், சூதகக்கட்டு.20.முருங்கை விதை:உடலுக்கு வலுவுண்டாக்கும், நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும்.21.நன்னாரி: நீரிழிவு, கிரந்தி, கரவேட்கை, வியர்வை நாற்றம்.22.நாவல் கொட்டை:நீரிழிவுக்கு சிறந்தது.23.நெல்லி முள்ளி:உட்சூடு, எலும்புருக்கி நோய், பித்தம், வாந்தி, மயக்கம்.24.நெஞ்சில்:சிறுநீரகக்கோளாறுகள், எலும்புருக்கி நோய், வெள்ளை, உடம்பு எரிச்சல்.25.நிலாவரை:மலச்சிக்கல், மூலவாயு, கிரந்தி, வயிற்றுவலி.26.நிலவேம்பு:காய்ச்சல், அஜீரணம், உடல்சோர்வு.27.ஓரிதழ்த்தாமரை:மேகவெட்டை, மேகத்தால் பருத்த உடலை தக்க நிலைக்கு கொண்டு வரும், உடலிற்கு வன்மையை அளிக்கும்.28.ரோஜா பூ:சுரம், தாகம், உடலை குளுமைப்படுத்தும், மலமிளக்கம் இரத்த சுத்தி.29.சீமை நிலவாகை:நஞ்சு, காமாலை, மாந்தம், வளிசுரம், கீழ்வாதம், முப்பிணி.30.சிறுகுறிஞ்சான்:சுரம், இருமல், அதிக உஷ்ணம், சர்க்கரை வியாதி.31.தாமரைப்பூ:இதயத்திற்கு பலத்தை அளித்து, வெப்பமுள்ள மருந்துகளின் சூட்டை நீக்கும்.32.தான்றிக்காய்:பல்வலி, சிலந்தி, நஞ்சு, இளைப்பு நீக்கி உடலுக்கு வன்மை தரும்.33.தண்ணீர்விட்டான்:நீரிழிவு, நாட்பட்ட சுரம், எலும்புருக்கி நோய், வெட்டை, உட்சூடு.34.துளசி:வெறிநாய், பினிசம், சுரம், உடலின் வெப்பத்தை அகற்றும்.35.தூதுவளை:இருமல், இளைப்பு, உணவில் சுவையைத் தரவல்லது.36.வாழைத்தண்டு:நீர்க்கட்டு, நீர் எரிவை போக்கி சிறுநீரை பெருக்கும்.விஷக்கடி.37.வல்லாரை:ஞாபக சக்தியை அதிகரித்து உடலுக்கு வன்மை தரும்.38.வேப்பிலை:வயிற்றுப்புழு, பெருநோய், மந்தம், நச்சு சுரம், அம்மை புண், சொறி சிரங்கு.39.வில்வம்:குடல் புண், வாந்தி, மயக்கம்.பல் பொடி மற்றும் நோய்களின் பெயர்கள்1.பிருந்தா பல்பொடி:உறுதியான பற்களுக்கு தினமும் உபயோகிக்கலாம்.2.சிகப்பு பல்பொடி:பல்வலி, எளிர்வீக்கம் நீங்கும்.
Send Enquiry
Read More
Page 1 1