http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) NALLATHU MATTUM DIND
NALLATHU MATTUM DIND
NALLATHU MATTUM DINDIGUL நவதானியம்: கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். கோதுமை: முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். நெல்: சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, ‘கறுப்புகாவனி‘ அரிசி.இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. துவரை: இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத்தருவதுடன் இது சிறந்த பத்திய உணவாகும்.இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும் உதவும்.துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம். கடலை:நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம்சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அவரை: இது, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படியும் கொழுப்பை கரைத்து விடும். ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பயன் கிடைக்கும். மூட்டு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மூளையை வலுவாக்கி, அறிவுக்கூர்மையை அதிகரிக்கவும் உதவும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், அவரைக்காயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும். எள்:எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறதுஎலும்பு அடர்த்தியை பராமரிக்கிறதுஎலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.கொழுப்பின் அளவை குறைக்கிறது.இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. உளுந்து:இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும். முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது. பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும். கொள்ளு:நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும். பயறு:மனிதனுடைய உணவின் ஒரு முக்கியபாகம் வகிப்பது பயறுவகைப் பயறுகளே ஆகும். "சூப்பர் உணவு" என்று ஐக்கிய நாடுகள் சபை பயறுவகைப் பயறுகளை வர்ணித்துள்ளது. "ஏழைகளின் இறைச்சி" என்று வர்ணிக்கப்படும் பயறுகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரதத்ைத அதிகளவில் தருகிறது.வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்சத்துக்ள், நுண்ணுாட்டச் சத்துக்கள், ெமக்னீசியம் , ெசலீனியம் ேபான்ற தாதுக்கள் நிறைந்த அளவில் பயறுகளில் உள்ளன. சத்துக்கள் நிறைந்த இவைகளை உற்பத்தி ெசய்வதில் மிகக்குறைவான தண்ணீேர ேபாதுமானதாக உள்ளது.பயிறுகளில் ெகாழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாக அறியப்படுகிறது.
  • 2018-02-13T07:53:02

Other Updates

View All Updates