http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) சிறுதானியம் (Millet)
சிறுதானியம் (Millet)
சிறுதானியம் (Millet)என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும். சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது..பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சுழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது. குதிரைவாலி:மான வாரி நிலத்தில் விளையக் கூடிய தானியம். குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புகள் இருப்பதால், எலும்புகளைப் பலப்படுத்தும். நீரிழிவு, ரத்த சோகை, வாய்ப்புண், குடல் புண், இருமல், சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் மிகச் சிறந்த உணவு இது. பனிவரகு:இது புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கக்கூடியது. எலும்புகளை அடர்த்தியாக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும். கல்லீரல் கற்களைக் கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணு குறைபாடுகளைப் போக்கும். மாதவிடாய் பிரச்னைகளைப் போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. பனிவரகு உணவு வகைகளை வயதானவர்கள் எடுத்துக்கொள்வதால் ஞாபகமறதி நீங்கும். சோளம்:சோளம் வேறு, மக்காச்சோளம் வேறு. நமது பாரம் பரிய சோளம் என்பது வெள்ளையாக, சிறிதாக இருக்கும்.சோளம் உடலை உறுதியாக்கும். பருமனைக் குறைக்கும். சோள உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும். வாய் துர்நாற்றம் நீங்கும். கேழ்வரகு:விட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. குடல் புண்களை ஆற்றும். பருமனாக இருப்பவர்களுக்கு கேழ்வரகு நல்லது. சாமை:சாமையில் இரும்புச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண்களை ஆற்றும்; மலச்சிக்கல் பிரச்னைகளைப் போக்கும். வரகு:இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.வரகரிசி, நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். எடை குறைக்கும். கல்லீரலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கும். பல்வேறு நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தும். இதை, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்வது நல்லது. வரகு வெந்தய தோசை மற்றும் வரகு அரிசியை லட்டு செய்து உண்பதால் மூட்டுவலி சரியாகும். மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். கம்பு:குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையும் தன்மை இதற்கு உண்டு. மிக அதிக அளவு இரும்புச்சத்து கொண்டது கம்பு. இது ரத்தசோகையைப் போக்கும். பசி தூண்டும். மலச்சிக்கலை நீக்கும். கம்பு சோறு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண், குடல் புண், வாய்புண் ஆகியவை குணமாகும். இருமல், இரைப்பு நோய் உள்ளவர்கள், கம்பங்கஞ்சியைக் குறைவாக அருந்த வேண்டும். முளைகட்டிய கம்பாக எடுத்துக்கொள்ளலாம். தினை:தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு. சிறு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பலங்காரங்கள், சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் நல்லது மட்டுமில் கிடைக்கும். சிறப்பு: வாகை மரச் செக்கு எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்டது. Contact Num:7397792812
  • 2017-10-01T09:09:38

Other Updates

View All Updates