http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (141) கொல்ல வேண்டாம்... இய
கொல்ல வேண்டாம்... இயற்கை பொருட்களை வைத்து ஓட... ஓட... விரட்டலாமே..!! எலி, பல்லி, ஈ, கொசு, கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி் போன்றவைகள் வராமல் தடுக்க சில எளிய வழிமுறைகள்... கண்டிப்பாக ஒவ்வொருவரும் இது போன்ற தொல்லைகள், இன்னல்கள், துன்பங்கள் தருகின்ற பூச்சிகள் மற்றும் இதர வகைகளால்... அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.. கடைகளில் விற்கும் விலை உயர்ந்த நச்சுப்பொருட்களைப் பயன்படுத்தி அவைகளைக் கொல்ல முயல்வதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே மகிழ்ச்சியுடன் அவற்றை எளிதில் விரட்டலாம். எலிகளுக்கு... எலிகளுக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே, புதினாவை அவைகள் வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ... அல்லது புதினா எண்ணெய்யை பஞ்சில் நனைத்து எலிகள் வரும் இடங்களில் வைத்தாலோ... அவைகள் வருவதைத் தடுக்கலாம்.. பல்லிகளுக்கு... உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில், வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓடுகளை வையுங்கள். அதன் நாற்றத்தினால், பல்லிகள் ஓடிவிடும். ஈக்களுக்கு... சில வீடுகளில் "ஈக்கள்" அதிகம் மொய்க்கும்.. அப்படி உங்கள் வீட்டில் "ஈக்கள்" அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.. இல்லாவிட்டால்... லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். கொசுக்களுக்கு... கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலைகள், நொச்சி இலைகளை பயன்படுத்தலாம்.. கொசு விரட்டிகள், கொசுக்களை விரட்டுவதை விட்டுவிட்டு... நம்மையெல்லாம் வியாதிகளைக்கொண்டு மிரட்டுகின்றன. எனவே அவற்றையெல்லாம் தவிர்த்து கொசுக்களை விரட்ட காய்ந்த வேப்பிலை, நொச்சிஇலை கலவை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால்... காய்ந்த வேப்பிலைகள் மற்றும் நொச்சி இலைகளைக்கொண்டு அனல் அளவிற்கு மட்டுமே தீ மூட்டுங்கள்... அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும் இல்லை...இல்லை... உங்களைக்கண்டு பயந்து ஓடி ஒளிந்துவிடும்...🧐😄🙃 கொசுக்களை விரட்ட வீட்டில் பஞ்சதீபம் ஏற்றுவது இன்னொரு முறை. நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், நெய் இவற்றையெல்லாம் சம அளவில் கலந்து காலை மாலை ஒரு மணிநேரம் விளக்கேற்றிய பிறகு... கொசுவிற்கும் நமது வீட்டிற்கும் ஜென்ம பகையாகிப் போகும். நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளில் இதுவும் ஒன்று. மின் விளக்குகளால் வெளிச்சம் தரமுடிந்ததே தவிர வேறு பயன்கள் இல்லை. ஆனால், இன்று நம் வீட்டு பெண்களுக்கு விளக்கேற்றுவதற்கு இணக்கம் இல்லை...🤨😌😉 கரப்பான்பூச்சிகளுக்கு... கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்... அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் அசல் மிளகுத் தூள், சின்ன வெங்காய கெட்டிச்சாறு மற்றும் பூண்டு கெட்டிச்சாறு ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.. மூட்டைப்பூச்சிகளுக்கு... மூட்டைப்பூச்சிகள் உங்கள் வீட்டின் படுக்கைகளில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் அழிந்து விடும். இயற்கை பூச்சி விரட்டி விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்... வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், நொச்சி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும். இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம். இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருட்கள் (மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் செய்யாதது) மூலம் இப்படிப்பட்ட பூச்சிகள் எளிமையான முறைகளில் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் தேவையான அளவுகளில் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை. மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இப்படி செய்வதன்மூலம் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டலாம்..!!
  • 2018-04-29T11:11:44

Other Updates

1.செம்பருத்தி ஆயில்;
Next
Latest
1.செம்பருத்தி ஆயில்; 2.கரிசலாங்கண்ணி ஆயில் கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி, செம்பருத்தி எண்ணெய்! நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t பயன்கள்; 1.செம்பருத்தி, கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சியை தூண்டும். 2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். 3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். 4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது. 5. நரைமுடியை போக்கும் 6. தலை அரிப்பை தடுக்கும். குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
Send Enquiry
Read More
View All Updates