http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) உடல் பருமன் முதல் நீ
உடல் பருமன் முதல் நீ
உடல் பருமன் முதல் நீண்ட இளமை வரை பலவகையில் உதவும் பிரவுன் சுகர்..! நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: https://www.youtube.com/channel/UCfBeWLeuI2iRi__81zLtsMA/videos WEBSITE: http://nallathumattum.co.in/_ நல்லது மட்டும்-ன் குழுவில் இணைய இதை சொடுக்கவும்.. (கிளிக் செய்யவும்..) 👇 https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவு பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் மாற்று இங்கு உள்ளது. உணவின் தரத்தை வைத்தே நாம் அவற்றை சாப்பிட வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை தீர்மானிக்க்க வேண்டும். நம் உடலுக்கு எல்லா வித ஆற்றலையும் தர கூடிய உணவு வகைகளை நாம் தவிர்த்து வந்தால், பல்வேறு விளைவுகள் வரும். அந்த வகையில் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இந்த நாட்டு சர்க்கரை உள்ளது. இதில் உள்ள நன்மைகள் ஏராளம். வெள்ளை சர்க்கரைக்கு பதில் இனி நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி வந்தால் உடல் பருமன் முதல் மாதவிடாய் வலி வரை அனைத்திற்கும் இது நன்மை தருமாம். இவற்றின் முழு பயன்பாட்டை பற்றி இனி அறிந்து கொள்வோம். நலம் தரும் நாட்டு சர்க்கரை...; நாட்டு சர்க்கரையில் பல வித நலன்கள் இருக்கிறது. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இது உடல் வலிமைக்கு மிகவும் உதவும். நாட்டு சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம், இரும்புசத்து போன்றவை நிறைந்துள்ளதாம். வேதி பொருட்கள் அற்ற சர்க்கரை...! வெள்ளை சர்க்கரையை போன்று இதில் எந்த வித வேதி பொருட்களும் கலப்பதில்லை. முற்றிலுமாக இயற்கை ரீதியாகவே இதனை தயார் செய்கின்றனர். ஆதலால், இயற்கையாகவே இதில் எண்ணற்ற தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கும். அத்துடன், எந்த வித பாதிப்பையும் இது உடலுக்கு தராது. மாதவிடாய் வலிகளுக்கு; பெண்களின் மிக கொடுமையான நாட்களாக கருதப்படும் இந்த மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி உண்மையில் மோசமானதுதான். இந்த வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படும். மேலும், கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடும். உடல் எடை குறைக்க...; தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடிவிட்டதே என வருத்தப்படுபவரா நீங்கள்..? இனி இந்த கவலைக்கு தீர்வை தருகிறது நாட்டு சர்க்கரை. இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறதாம். எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் உடல் எடை குறைய அதிகம் உதவும். கர்ப்பிணிகளின் நலன் காக்க...; குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பிணிகள் உடல் அளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இதனை அவர்கள் சரி செய்ய பல வித வழிகளை கையாண்டும் பல பெற்றிருக்க மாட்டார்கள். உடனடியாக பழைய நிலைக்கே திரும்ப நாட்டு சர்க்கரை பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா பிரச்சினைக்கு; இன்று பலரும் மூச்சு திணறல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு ஒரு அருமையான தீர்வாக இந்த நாட்டு சர்க்கரை இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சினை குணமடையும். மேலும், உடலுக்கு அதிக வலிமையையும் கிடைக்கும். அஜீரண கோளாறுகளுக்கு..; செரிமான பிரச்சினையால் இன்று பலர் கஷ்டப்படுகின்றனர். இனி நாட்டு சர்க்கரையை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரண கோளாறுகள் விரைவிலே குணமாகும். அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடியுங்கள். புத்துணர்வூட்டி...; தினமும் சோர்வாக உணர்கிறீர்களா..? இனி இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு சர்க்கரை பயன்படும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் பலவித நன்மைகள் கிடைக்கும். இவை சோர்வாக உள்ள உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். சளி தொல்லைக்கு; பருவ காலங்களில் சளி தொல்லையால் பலர் பாதிக்கப்படுவர். இதனை சரி செய்ய நாட்டு சர்க்கரை உள்ளது. இவை சளி, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை உடனடியாகவே குணமாக்கும். சளிக்கும் சிறிது ஐஜினி மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம். சரும அழகிற்கு; இதில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை முற்றிலுமாக இது போக்கும். மேலும், இளமையான சருமத்தை தந்து செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள். இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் நாட்டு சர்க்கரை கிடைக்கும்🌱
  • 2018-10-09T07:18:27

Other Updates

View All Updates