http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) தலைமுடி பிரச்சனை முத
தலைமுடி பிரச்சனை முத
தலைமுடி பிரச்சனை முதல் புற்றுநோய் வரை அத்தனைக்கும் வரப்பிரசாதம் இந்த விதைதான்.. மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் எல்லோரையும் அச்சுறுத்துகின்ற ஒரு வியாதியாக இருப்பது புற்றுநோய் தான். அதிலும் குறிப்பாக, உடலின் உள்ளுறுப்புக்களில் வருகின்ற புற்றுநோய் நமக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் எந்தவித அறிகுறியையும் வெளிக்காட்டாமல் ரகசியமாக வளர்ந்து மற்ற உறுப்பகளையும் சிதைக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்போது நம்மால் என்ன செய்ய முடியும். அதில் மிக முக்கியமான ஒன்று கணைய புற்றுநோய். கணைய புற்றுநோய்; கணைய புற்றுநோயானது அவ்வளவு எளிதாக எந்தவித அறிகுறியையும் நமக்கு வெளியில் காட்டுவதே இல்லை. வந்தபின்பும் மற்ற உறுப்புகளை விட, இந்த கணைய புற்றுநோயில் இருந்து காப்பாற்றுவது மிகமிக அரிதான விஷயம். கர்ப்ப காலத்தின் போது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் பிற்காலத்தில்இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். இத்தகைய புற்றுநோயை அடியோடு குணப்படுத்தும் ஒரு இயற்கை வரப்பிரசாதம் தான் கருஞ்சீரகம். நன்மைகள்; நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற பிராண சக்தி குறைகின்ற பொழுது, நம் ரத்தம், கணையம், குடல் என நம்முடைய உடலுக்குள் உறைந்திருக்கின்ற புற்றுநோய் செல்கள் பல மடங்கு பெருக ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த கருஞ்சீரகமோ நம்முடைய உடலுக்குத் தேவையான பிராண சக்தியை நமக்கு வழங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. இயற்கையாகவே நம்முடைய உடலுக்குள் நச்சுப்பொருள்கள் எதுவும் சென்று சேராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கருஞ்சீரகத்துக்கு உண்டு. நம்முடைய எலும்பு மஜ்ஜைகள் சீராக உற்பத்தியாகவும் இயங்கவும் கூட இந்த கருஞ்சீரகம் பெரும் துணை புரிகிறது. மேலும் உடலின் கொலஸ்ட்ராலின் அளவினை சமன் செய்வதற்கான உதவியையும் செய்கிறது. ஊட்டச்சத்துக்கள்; உடலுக்குத் தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிட்ரிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ணுயிலிக் அமிலம், லினோயின் அமிலம், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், ஃபோலிக் அமிலம் போன்றவை கருஞ்சீரகத்துக்குள் இருந்திருக்கிறது. அதோடு புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, பி2, பி3 போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய அற்புத மருத்துவம் தான் இந்த கருஞ்சீரகம். மருத்துவ குணங்கள்; கருஞ்சீரகம் நம்முடைய பசியை சரியான இடைவெளியில் தூண்டிவிடும். அதோடு மட்டுமல்லாமல் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. வாந்தி மயக்கம் ஆகியவற்றைத் தீர்க்கும். இதயப் பிரச்னைகள் தீரும். சிறிதளவு கருஞ்சீரகத்தை எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும். இன்னும் ஏராளமான பலன்களை கருஞ்சீரகம் நமக்குக் கொடுக்கிறது. தோல் வியாதிகள்; கருஞ்சீரகத்தைத் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த பேஸ்ட்டை நல்லெண்ணெயில் குழைத்து கரப்பான், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் தடவி வர தோல் சம்பந்தப்பட்ட தீராத நோயும் தீரும். தேமல் மேல் தடவ, தேமலும் மறையும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குறைப்பதில் மிகத் தீவிரமாக குணப்படுத்துவது கருஞ்சீரகம். வயிற்றுப் பிரச்னை; கருஞ்சீரகத்தைத் சில துளிகள் தேன்விட்டு அரைத்து, பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு வயிற்றில் தடவி வர, தீராத வலியும் தீரும். அதேபோல கருஞ்சீரகப் பொடியுடன் சிறிது மல்லிப்பொடியும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வர, அஜீரணக்கோளாறுகள் சரியாகும். தயிரில் கலந்தும் சாப்பிடலாம். வாய் பிரச்னைகள்; கருஞ்சீரகத்தை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து வீக்கங்களில் தடவினால் வீக்கம் கரையும். அதேபோல வினிகரில் சிறிது கருஞ்சீரகத்தைப் போட்டு வேகவைத்து வாய் கொப்பளித்து வந்தால் சொத்தைப்பல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கும். ஜலதோஷம்; தலைவலிக்கு கருஞ்சீரகத்தை அரைத்து பற்று போடலாம். இந்த விதைகளைப் பொடி செய்து, நலலெண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் இரண்டு சொட்டுகள் வீதம் விட்டு வந்தால் கடுமையான ஜலதோஷம் தீரும். தலைமுடிக்கு; கருஞ்சீரகம் தலைமுடிக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. கருஞ்சீரகத்தை 4 ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, லேசாக வறுக்கவும். கால் லிட்டர் நல்லெண்ணெயை மேிதமான தீயில் வைத்துக் காய்ச்சி அதில் இந்த பொடியைப் போட்டு காய்ச்சுங்கள். எண்ணெய்ப் புகை வரும் அளவுக்குக் காய்ச்சக் கூடாது. பின் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைத்து, தினமும் தலையில் தேய்த்து வாருங்கள். தலைமுடி கருகருவென வளர ஆரம்பிக்கும். இப்படிக்கு, நல்லது மட்டும் இயற்கை அங்காடி 🍃 நம்மிடம் கருஞ்சீரகம் கிடைக்கும் 🌱
  • 2018-09-25T11:40:21

Other Updates

View All Updates